பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியும் தோல்வியும் 43. அளவே இல்லை. பீரங்கிகளின் முழக்கமும், வாண வேடிக்கைகளும், ஊர்வலங்களும் மக்களின் மகிழ்ச் சிக்கு அறிகுறிகளாக விளங்கின. தலைவர்கள் ஆரவாரங்களைக் கண்டு மயங்கிவிடவில்லே. புரட்சி ஆரம்பமாகி யிருங்ததைத் தவிர அதன் வேலைகள் எல்லாம் இனிமேல்தான் நடைபெறவேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். குடியரசு பெயரளவில் ஏற்பட்டிருந்த போதிலும், அதன் ஆதிக்கம் தேசம் முழுதும் பரவுவதற்கு முன்ல்ை இரத்த ஆறுகளைக் கடந்துசெல்ல வேண்டியிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். பெரிய போராட்டங் களில், அரசாங்கப் படைகளுக்கு முன்ல்ை புரட்சிப் படைகள் சில நிமிஷங்கள் கூட நிற்க முடியாது என்பதும், பொருளாதாரத் துறையில் குடியரசு மிகப் பலக்குறைவாக இருந்தது என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெளிவாயிருந்தன. இந்த நிலைமையில் டாக்டர் ஸன் யாட்-ஸென் தாம் தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டு யுவான் ஷி-கேய் என்பவரைக் குடியரசுத் தலைவ ராக்கினர். இது மகா தியாகம் என்று முன்னரே குறிப்பிடப்பட்டிருக்கிறது. யுவான் ஒரு கொள்கையும் இல்லாதவர். வெற்றியடைகிற கட்சிதான் அவர் கட்சி; மஞ்சு வம்சத்துக் கடைசி மகாராணியாக அப் ப்ொழுது ஆட்சிபுரிந்து வந்தவரால் அரசாங்கத்தின் உதவிக்காக அவர் அழைக்கப்பட் டிருந்தார். முன்னல் அதே மகாராணியால் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர் நீக்கும்பொழுது அவருக்கு உடம்பு செளகரியமில்லாததால், அவராக விலகிக்கொள்வதாக மகாராணி அறிக்கை விட்டிருந்தார். பின்னல் புரட்சி கொங்தளிக்க ஆரம்பித்ததும், ஹாங்செள, ஷாங்காய், நான்கிங் எல்லாம் புரட்சிக்காரர்கள் கையில் விழுங்து விட்டதும், மகாராணி கவலை யடைங்து, யுவான மறுபடி வேலேக்கு அழைத்தார்.