பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சியாங் கே-வேடிக் சியாங் எத்தகைய தளகர்த்தர் என்பதும் அவருடைய அரிய சேவைகளிலிருந்து புலயிைற்று. டாக்டர் எலன் அவரிடம் அதிக கம்பிக்கைகொண்டு, முன் னிலும் அதிக நெருக்கமாகப் பழகிவந்தார். இது முதல் அவர் களைக் குருவும் சீடரும் என்று கருதலாம். தாற்கா லிகமாக ஏற்பட்ட தோல்வியால் இருவரும் கலக்கம் அடையாமல், ஜப்பானுக்குப் போய் மேல் விளைவு என்ன ஆகும் என்பதைச் சிங்தித்துத் திட்டம் வகுக்க ஆரம்பித்தனர். அதே சமயத்தில் சீனவில் யுவான் புரட்சியை வேரோடு கல்லி எறிந்துவிட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வங்தார். கோயின் டாங் கலைக்கப்பட்டது. கோமின் டாங் அங்கத்தினர் பார்லிமென்டில் இல்லாமற் போனதால் பார்லி மென்டும் ஜீவனே இழந்தது. தமக்கு ஒத்தபடி தலே யாட்டக் கூடிய சில பொம்மைகளைப் பொறுக்கி யுவான் ஒர் அரசியல் சபையை நியமித்துக் கொண்டார். சுருங்கச் சொன்னல், குடியரசையே அவர் கசக்கி மோங்து பார்த்துக்கொண் டிருந்தார். எலன் யாட்-ஸென், சியாங், சென் முதலிய தலைவர்கள் புரட்சி இயக்கத்தின் பலவீனங்களே ப் பற்றி ஆராய்ந்து, மேற்கொண்டு அவைகளைக் கஃளங்து விடுவதற்கு வழிகளே அமைத்துக்கொண் டிருந்தனர். கோமின்டாங் அங்கத்தினருள் ஒழுங்கும் கட்டுப் பாடும் குறைவாக இருந்ததாலும், தென் சீனவில் மட்டுமே புரட்சிப் பிரசாரம் அதிகமாக நடந்து வந்த தாலும், பல தோல்விகள் ஏற்பட்டன என்று அத் தலைவர்கள் அபிப்பிராயப்பட்டனர். டாக்டர் ஸன், மேற்கொண்டு சேருகிற அங்கத்தினர், தம்மிடம் விசுவாசமாக இருப்பதாகப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று ஒரு புது விதியை அமைத்தார். வட சீனவிலும், வட கிழக்கிலும் புரட்சி வித்துக்களே ஆழமாக விதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மஞ்சூரியாவிலும் பிரசாரம் செய்ய அங்குள்ள