பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சயாங் கே-வேடிக கிடங்கை நோக்கிப் பீரங்கிப் பிரயோகம் செய்யும் நிலைக்கு வங்துவிட்டது. அதன் உச்சியில் புரட்சிக் கொடி பறந்துகொண்டிருந்தது. துரதிருஷ்ட வசமாக மற்றும் பல கப்பல்கள், செளஹோவை நோக்கிச் சுட ஆரம்பித்து விட்டன. அவைகளின் தலைவர்கள் துரோகி யுவானுக்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் மறுநாள் காலேயில் புரட்சிக் கப்பல் பின் வாங்கிச் செல்ல நேர்ந்தது. செளஹோ கப்பல் பீரங்கிப் பிரயோகம் செய்த அதே சமயத்தில், சென், சியாங் முதலிய தலைவர்கள் கான் டாவுக்குச் சென்று, கில மார்க்கமாகவும் தாக்கு வதற்கு முற்பட்டார்கள். அவர்களுடைய திட்டம் நிறைவேருமல் போயிற்று. ய:வானின் படைகள் முக்கியமான ஒவ்வொரு கட்டத்திலும் அணிவகுத்து கின்று எதிர்த்தன. புரட்சிப் படைகள் பின்வாங்கி விட்டன. பின்னல் சியாங் கலந்துகொண்ட போராட்டங் களில் முக்கியமாய்க் குறிப்பிடவேண்டியது கியாங்கின் கோட்டையைப் பிடித்துக்கொண்டதாகும். இங்தக் கோட்டை யாங்ட்ஸி நதியின் தென்கரையில், ஷாங் 'காய்க்கும் நான் கிங்குக்கும் நடுவே உள்ளது. இதைப் பிடித்த பிறகு, படைகளுக்குள் ஒரு கலகம் ஏற்பட்ட தால், சியாங் ஷாங்காய்க்குத் திரும்பிச் சென் ருர். இதன் பிறகு அவர் உள்ளத்தை வாட்டி வருத்தக் கூடிய ஒரு சம்பவம் கடந்தது. புரட்சியே மூச்சுக் காற்ருகக்கொண்டு வாழ்ந்து வந்த சென் சி-மெய்யின் உயிருக்குப் பகைவர்கள் உலே வைத்துவிட்டார்கள். சென் புரட்சியின் கொழுந்து. அதை அவித்தால் அன்றி யுவான் தப்ப முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இதல்ை, அரசாங்க ஒற்றர்கள் சிலர் ஒரு ஜப்பானிய வியாபாரியிடமிருந்து புரட்சிக்கு ஏராளமான கடன் வாங்கித் தருவதாகச்