பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாம்போவா ராணுவக் கலாசாலை 157 சியாங்கும், மற்றும் சில நண்பர்களும் ஒரு பிரிட்டிஷ் கப்பலில் ஹாங்காங் சென்று, அங்கிருந்து வாங்காயை அடைந்தனர். சென் சியுங்-மிங் கலகம் ஆரம்பித்தது முதல் இரண்டு மாத காலம் சியாங்கும் என்னும் ஒன்று சேர்ந்து வாழ நேர்ந்தது. ஒத்த கொள் கையும் ஒத்த உணர்ச்சியும் கொண்ட இங்த உத்தமர்கள் தக்கத் தையும் ஒன்றுபோலப் பகிர்ந்து அநுபவிக்க இங்தச் சங்தர்ப்பம் உதவியது. சோகங்தான் மனிதரைப் புட்ம் போட்டு ஒளிபெறச் செய்ய வல்லது. துன்பத் தியில் வெந்துகொண்டிருந்த எலன் , சிறிதும் கலங் காமல், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று நம்பி, உதய காலத்தை எதிர் நோக்கிக்கொண் டிருந்தார். சியாங் அவ்ருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து, ஆலோசனை கூறி, அவரை விட்டு அகலாமல் அருகேயிருந்து பாதுகாத்து வந்தார். தலைவர் ளன் சியாங்கின் அரிய குணங்களைக் கண்டு, அவர் புரட்சி இயக்கத்திற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று கருதினர். இதிலிருந்து இருவருடைய வாழ்க்கை யிலும் ஒரு புதிய சகாப்தமே ஆரம்பமாயிற்று. பத்து வருஷ காலமாகப் பெயர் ஊர் தெரியாமல், புரட்சி இயக்கத்தின் நடுவே எத்தனையோ போராட்டங் களில் கலந்துகொண்டிருந்த சியாங் முக்கியமான தலைமைப் பதவிகளை ஏற்கவேண் டிய காலம் கெருங்கி வங்து கொண்டிருந்தது. சென் சியுங்-மிங் செய்து வந்த துரோகங்கள் தேசத்தில் கொந்தளிப்பை உண்டாக்கின. அவரைத் கொலைக்கவேண்டியதே முதல் வேலையாக இருந்தது. 1933 அக்டோபரில் அவருக்கு எதிரான போராட் டங்கள் ஆரம்பமாயின. இரண்டு மாதங்களில் யுன் ன்ை படைகள் யாங் ஸி-மின் னின் தலைமையில் வேறு படைகளின் உதவியையும் பெற்றுக்கொண்டு,