பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாம்போவா ராணுவக் கலாசாலை 161 பெரும் புகழ் பெற்ருர். அதன் மூலம் ஏராளமான தளகர்த்தர்கள் பயிற்சி பெற்று வெளிவந்ததால்தான் பிற்காலத்தில் சியாங் பற்பல போர்க்களங்களில் வெற்றி பெற முடிந்தது. சீனக் குடியரசில் வாம்போவா ஒரு முக்கிய ஸ்தானத்தைப் பெற் றிருந்தது. அங்கே பயிற்சி பெற்ற தளகர்த்தர்கள் புரட்சியில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டார்கள். அதுவும், மிகுந்த கண்யத்துடனும் புகழுடனும் எடுத்துக்கொண்டார்கள் என்று சொல்லவேண்டும். 1934-ஆம் u இறுதியில் டாக்டர் லன் வட சீளுவுக்குப் போயிருந்தார். சாங் த்ஸோ - லின் போன்ற தளகர்த்தர்களே கேரில் கண்டு பேசி, வடக்கேயும் தெற்கேயும் இரண்டு சர்க்கார்கள் கடை பெறுவதை ஒன்ருக்கவும், மேற்கொண்டு போர்கள் ஒடுங்கவும் ஒரு வழி காண்பதே அவருடைய விஜயத்தின் கோக்கம். அவர் புறப்படு முன்பாக ஹ- ஹான்-மின்னைத் தாற்காலிக சேளுபதியாக நியமித்திருந்தார். ராணுவ விஷயங்களேப் பொது வாகச் சியாங் கே-வுேக்கே கவனித்து வந்தார். அவர் தம்மிடம் பயிற்சி பெற்ற தளகர்த்தர்களைக் கொண்டு இரண்டு பெரிய படைகளை அமைத்திருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே அவை தீவிர தேசபக்தியுடன் புரட்சியின் சின்னங்களாக விளங்கின. டாக்டர் எலன் வடதிசை போய்விட்டார் என்பதை அறிந்ததும் பழைய கலகத் தலைவர் சென் சியுங்-மின் மீண்டும் கான்டனைப் பிடித்துக்கொள்ளக் கிள்ம்பி விட்டார். அவருடைய படைகள் வேகமாக அணிவகுத்து வந்தன. ஆல்ை, பழைய கிலேமை மாறி விட்டது என்பது அவருக்குத் தெரியாது. சியாங் தேசியப் படைகளே ஒன்று சேர்த்து, தற்காப்புக்காகக் காத்துக்கொண்டிராமல், படையெடுத்து வரும் படைகளின்மேல் படையெடுத்துச் செல்லும்படி சி. 11