பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வாம்போவா ராணுவக் கலாசாலை 165 யிருந்தது என்பது விளங்கும். அக்கட்சியைப் பற்றிப் பின்னுல் விவரமாகக் கூறப்பட்டிருக்கிறது. எனினும், வடதிசைப் போராட்டம் ஆரம்பமாகு முன் அக்கட்சி இருந்த கிலேமையை இங்கே சிறிது கவனிக்க வேண்டியது அவசியம். டாக்டர் எலன் காலமான பிறகு அக்கட்சிக்கும் கோமின்டாங் சபைக்கும் பிளவு அதிகரித்து வந்த காரணங்களேயும் அறிந்துகொள்ள வேண்டும், பொதுவாகக் கோமின்டாங் அங்கத் தினர்கள், தேசம் அங்ங்யர்களுடைய பிடியிலிருந்து விடுதலே பெற்று, மேல் நாடுகளிலுள்ள குடியரசைப் போல் அரசாங்கம் அமைந்து, யுத்த வெறிகொண்ட பிரபுக்களுடைய கொட்டம் ஒடுங்கிவிட்டாற் போதும் என்றே கருதினர்கள். கம்யூனிஸம் போன்ற தீவிரக் கொள்கைகளில் அவர்களுக்குச் சிறிது அதுதாபம் உண்டு, அவ்வளவுதான். அவர்களிற் பெரும்பாலோர் குடியானவர் வகுப்பைச் சேர்ந்த பிரபுக்கள். அவர்களுக்கு மாருகத் தீவிரத் தன்மையும், புரட்சிகரமான மனப்பான்மையும் கொண்ட வேறு ஒரு படித்த வகுப்பாரும் இருங்தனர். அவர்களே இடதுசாரியினர் என்று சொல்வது வழக்கம். அவர்கள் உண்மையான ஜனகாயகம் அமையவேண்டும் என்று விரும்பியவர்கள். ஜனங்கள் வாக்குரிமை பெற்றுப் பிரதிநிதிகளைத் தேர்ங்தெடுப்பதோடு கில்லாது, பொருளாதாரத் துறையிலும் அடிப்படையான மாறுதல் ஏற்படவேண்டும் என்று அவர்கள் விரும்பி ஞர்கள். அவர்கள் கம்யூனிஸ்டுகள். தொழிலாளர் களும் விவசாயிகளும் ஜனகாயகப் புரட்சியில் சேர்ந்து போராடும்படி கட்சியை விரிவுபடுத்தி அமைக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்து. அவர்கள் கார்ல் மார்க்ஸ், லெனின் முதலியோருடைய நூல்களேக் கற்று, ரஷ்யா காட்டி வங்க மாதிரியைப் பின் பற்றுவதில் மோகம் கொண்டவர்கள். எகாதிபத்திய எதிர்ப்பிலும், ஜனங்களுக்கே சகல அதிகாரங்களும்