பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O சியாங் கே-வேடிக் ஜெனரலாக நியமிக்கப் பெற்றிருந்தார். அப்பொழுது தான் கம்யூனிஸ் டுகளே அடக்குவதற்கும் அவர் தீவிர மாக முற்பட்டார். வாம்போவா ராணுவக் கலாசாலே யில் பயின்ற கம்யூனிஸ்ட் தளகர்த்தரான லீ சி - அலுங் என்பவர் ஒரு புத்தக் கப்பலேக் கான்டனுக்குச் சமீபத்தில் கொண்டுவந்திருந்தார். உத்தரவில்லாமல் அவர் அப்படி வந்ததற்காகச் சியாங் அவருடைய பதவியைப் பறித்துவிட்டு, கான்டனில் ராணுவச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தார். கம்யூ னிஸ்ட் வேட்டை ஆரம்பமாயிற்று. ரஷ்ய நிபுணர்கள் பலரும் போரோடினும் காட்டைவிட்டு வெளியேற் |றப்பட்டனர். பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதி செய்யப்பட்டனர். மூன்று நாட்கள் எங்கும் கட புடலாக வேலைகள் கடந்தன. அப்பொழுது அர சாங்கத் தலைவர் வாங் சிங்-வெப் கோயுற்றிருந்தார். அவரைக் கேளாமலே சியாங் வேலைக்கள் முடித்துக் கொண்டு, தாம் தம் அதிகாரத்தை மீறி நடந்ததாகக் கூறினுல் தண்டனே ஏற்றுக் கொள்ளத் தயார் என்று சொல்லிவிட்டார். வாங் சிங் - வெய் உடல் நலம் கருதி ஐரோப்பாவுக்குப் போய்விட்டார். பின்னுல் தேசிய அரசாங்கம் சியாங் கே-ஷேக்கைச் சேன பதியாக நியமித்தது. 1936-ஆம் u ஜூலை 9வ. அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.