பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சியாங் G3-Gఎఖఉ இருப்பது எல்லா மக்களுக்கும் ஆனந்தம் அளிக்கும் விஷயம். நறுமணம் வீசும் பல நிற மலர்கள் பூமகளின் புன்னகை போலவே விளங்கும். இக்காட்சியை ஒரு சீனச் சக்கரவர்த்தி மிகவும் ரஸிகத்தன்மையோடு அநுபவித்ததாகச் சரித்திரம் கூறுகின்றது. காலேயில் இளஞ்சூரியனின் ஒளி பரவு முன்பு, அரண்மனே இசைவாணர்கள் முகை விரியும் மலர்களுக்கு இசை பாட வேண்டும் என்று அவர் ஏற்பாடு செய்திருங் தாராம். முல்லைக்கொடி படர்வதற்காகத் தம்முடைய தேரைக் கொடுத்த நமது தமிழ் மன்னரை இவருக்கு ஒப்பிடலாம். இவர்களுடைய இருதய பாவத்தின் மென்மையையும், ரஸிகத் தன்மையையும் கவிகள் தாம் பாராட்டிப் புகழ முடியும். இந்த உள்ளப் பண்பாட்டின் பெருமை இதற்கு நேர் விரோதமான ஒரு குணத்தைப் பார்த்தால் நன்கு விளங்கும். மேல் நாட்டு ரோமாபுரியின் சக்கரவர்த்தியான நீ ரோ என்பவர் தம்முடைய தலைநகர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த பொழுது அரண்மனையில் ஆனந்த மாகப் பிடில் வாசித்துக்கொண்டிருந்தாராம்! வெடி மருங்தை முதலில் கண்டுபிடித்த தேசம் சீனதான். இதை மற்ற நாடுகளே அழிப்பதற்காக உடனே உபயோகித்திருந்தால் சீன உலகம் முழு வதையுமே ஜயித்திருக்கலாம். ஆனல் அது அந்தக் கொலேபாதகத் தொழிலுக்கு வெடி மருங்தை உபயோகிக்காமல் விட்டுவிட்டது. அது மட்டுமல்ல. சீனர்கள், அந்த மருங்தை வாணங்களாகவும், வெடி களாகவும் செய்து, நெருப்புப் பற்ற வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன் றைக்கும் சீன வெடிகள் கோடிக்கணக்கான குழங்தை களுக்கும் மக்களுக்கும் ஆனங்தமளிக்கும் பொருள் கள்ாக இருக்கின்றன. வெகு காலத்திற்குப் பிறகே வெளி நாடுகளில் வெடி மருங்து, காசக் கருவியாக உபயோகப்பட ஆரம்பித்தது.