பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சியாங் கே-வேடிக் பிரசாரமோ இல்லாமல் ஒரு நாள் கூடக் கழிங்த தில்லை. அத்தகைய ஜீவனும் துடிப்பும் கிறைந்த கூட்டத்தோடு சியாங்கும் மற்ற வலது சாரியினரும் ஒத்துப் போக முடியவில்லை. நாள்தோறும் பிளவு அதிகரித்துக்கொண்டே போயிற்று. ஏப்ரில் மாதம் 3வ வாங் சிங்-வெய் வெளிநாட்டி லிருந்து திரும்பிவங்தார். தேசத்தில் அவரும், சியாங்குமே முக்கியமான தலைவர்கள். இருவரும் கூடிக் கலந்து பேசினர். சியாங் இடைக்காலத்தில் கேர்ங்த சம்பவங்களை யெல்லாம் விவரமாக எடுத்துக் கூறினர். வாங் சிங்-வெய் ஹாங்கோவுக்குச் சென்று கம்யூனிஸ்டுகளின் கட்சியை விவரமாகத் தெரிந்து வரவேண்டும் என்று புறப்பட்டார். அவர் திரும்பி வருகிறவரை சியாங் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. இடையில் வடக்கே சாங் த்ஸோ-லின் உத்தரவின் பேரில் பெகிங் நகரிலிருங்க ளோவியத் ஸ்தானிகருடைய காரியாலயம் சோதனையிடப் பட்டது. அங்கே இருந்த தஸ்தவேஜுகள் எடுத்துச் செல்லப்பட்டன. அவைகளிலிருங்து போரோடினும் கம்யூனிஸ்டுகளும் கோமின்டாங்குக்கு எதிராக வேலை செய்து வந்தது வெளியாயிற்று என்று சொல்லப் படுகிறது. சியாங் தாமதமில்லாமல் கம்யூனிஸ்டு களின் மேல் அடக்குமுறைகளைப் பொழிய ஆரம் பித்தார். வடிாங்காயில் பட்டாளத்திற்கு அருகே வங்து தாக்கிய தெர்ழிலாளரில் 100 பேர் கொல்லப்பட்டனர், 90 பேர் கைதி செய்யப்பட்டனர். முன்னல் சியாங் அந்த ககரத்தைப் பிடித்துக்கொள்ள உதவியாக கின்று வேலை கிறுத்தம் செய்த தொழிலாளர்கள் அதே சியாங்கின் உத்தரவில்ை கொடுங் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். கம்யூனிஸ்டுகளிடமிருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள், பிஸ்டல்கள் எல்லாம் பறிக்கப்பட்டன. மேலும், நான்கிங்கிலும்