பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 186 சியாங் கே-வேடிக் བསྲི / / வேண்டும் என்றும் ஆதிமுதல் அவர்கள் கூறி வந்தார்கள். ஆனால், சியாங்கும் கோமின்டாங் தலைவர்களும், சண்டை செய்ய வேண்டியதெல்லாம் கம்யூனிஸ்டுகளோடு மட்டுமே என்றும், அரசாங்கப் படைகளையும் பணத்தையும் அதற்கே அர்ப்பணம் செய்துவிடுவது என்றும் தீர்மானித்தார்கள். 1937ஆம் u வரை அவர்கள் ஜப்பானே எதிர்த்துப் போராட முடியாது என்று கருதி வந்ததோடு, வெளிப்படையாக அப்படியே கூறியும் வந்தார்கள். இத்தகைய சந்தர்ப்பத்தை ஜப்பான் தனக்கு அது கூலமாக உபயோகித்துக் கொண்டதில் வியப்பே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அது சீனாவின் பிரதேசங்களைக் கடித்து விழுங்க ஆரம்பித்தது. எழுபது வருஷ காலமாகவே ஜப்பான் பெரிய யுத்தத்திற்குத் தயாரித்துக்கொண்டு வங்திருக்கிறது. இடையிடையே சிறு புத்தங்களில் தலையிட்டுப் பலம் தேடிக்கொண்டு, பயிற்சியும் பெற்று வந்திருக்கிறது. 1894-ல் அது சீன வைத் தோற்கடித்தது; 1905-ல் ரஷ்யாவைத் தோற்கடித்தது , 1914-ல் நேசதேசங் களுடன் சேர்ந்து, சீனவில் ஷான்டுங் மாகாண த்தை யும், பல தீவுகளையும் பிடித்துக்கொண்டது. 1915-ல் அக்கிரமமான 2t-நிபந்தனைகளைச் சீன நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தியது. 1937-ல் மீண்டும் வடிான்டுங் மாகாணத்தின்மேல் படையெடுத்துப் பிறகு பின்வாங்கியது. 1938-ல் மஞ்சூரியாவைச் சீன விடமிருந்து அபகரிக்க ஏற்பாடு செய்தது. சீன சர்வ தேச சங்கத்தை நம்பி வெகு நாள் ஏமாந்துகொண் டிருந்தது. ஜப்பானுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுப்பதற்குச் சியாங்குக்கு ஆலோசனை சொல்லித் து.ாண்டக்கூடிய பலர் கோமின் டாங்கில் இல்லை. இருந்த சிலரும் வலது சாரியினரின் அதிகார மோகத் திற்கு அடிபணிந்து கிற்கவேண்டியிருந்தது.