பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சியாங் கே-வேடிக் வந்தார். ஆனால், அவர் ஒப்பற்ற சேனாபதி. அதோ கதியாக விழவேண்டிய சீனவை உத்தாரணம் செய்தவர் அவர். கடுகளவு சுய கலமும் இல்லாத துயர். அவரே தலைமையில் இருக்கவேண்டும். ஆனல் கம்யூனிஸ்டுகளைப் பற்றிய அவருடைய மனப் பான்மை மாறவேண்டும்; எல்லா ஆயுதங்களும் ஏக காலத்தில் ஜப்பானியரைத் தாக்க உபயோகமாக வேண்டும். சியாங் பிடிவாதக்காரர். ஆனல் கியாயம் கம்யூனிஸ்டுகள் பக்கம் இருந்தது. எனவே, சாங் வியூ-லியாங் கம்யூனிஸ்டுகளே எதிர்ப்பதை நிறுத்தி விட்டார். ஜப்பானுக்கு எதிராகத் துவேஷம் உண்டா வதற்குத் தம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலேயும் செய்ய ஆரம்பித்தார். அவர் ஏராளமான பள்ளிக்கூடங்கள் அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். ராணுவக் கலாசாலை அமைத்துத் தளகர்த்தர்களுக்குப் பயிற்சி அளித்தார். பல விதத்திலும் ஜனங்களுக்கும் படை வீரர்களுக்கும் வீர ஆவேசம் உண்டாகும்படி அவர் வேலைசெய்து வங்தார். சாங் வியூ-லியாங் பழைய மஞ்சூரிய தளகர்த்த ரான சாங் த்ஸோ-வின்னின் குமாரர் என்பது முன் 181-ஆம் பக்கத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தங்தை இறந்த்வுடன் குமாரர் படைகளே எல்லாம் ஒன்று சேர்த்துச் சாமர்த்தியமாகத் தம் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டார். பின்னல் ஜப்பான் மஞ்சூரி யாவைப் பிடித்துக்கொண்டதால், அவர் சீனவின் உட்பகுதிக்கு வங்துவிட்டார். அவருடன் 40,009 வீரரைக் கொண்ட படையும் இருந்தது. அந்த வீரர்கள் எல்லோரும் தங்கள் தாயகமாகிய மஞ்சூரி யாவை அபகரித்துக்கொண்ட ஜப்பானைப் பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருங் தார்கள். தங்களுடைய உற்ருர் உறவினரை யெல்லாம் ஜப்பானியப் படைகள் வதைத்ததை அவர்கள்