பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேபைதி சிறைப்பட்டார். 209 பேசியதால் பெரிய மன மாற்றம் அடைங்திருந்தார் என்பதில் சங்தேகமில்லே. ஆயினும், அவருடைய பிடிவாத குணம் அங்த மாற்றத்தை வெளிக்காட்ட விடவில்லை. சியாங் கைதியான பிறகு கம்யூனிஸ்ட் தலைவர் களுடைய கருத்து எப்படி இருந்தது? அவரை விரைவில் விடுதலே செய்து அனுப்பிவிட வேண்டும் என்பதே அவர்களுடைய ஏகோபித்த அபிப்பிராயம். அதற்காக அவர்கள் வாலிபத் தளகர்த்தரிடம் இடை விடாமல் வாதாடி வற்புறுத்தி வங்தார்கள். சேனபதி யைக் கைதி செய்ததில் கம்யூனிஸ்டுகளுக்கு யாதொரு சம்பங்தமும் இல்லை என்பது பின்னல் தேசம் முழுவதிலும் தெளிவாகத் தெரிந்திருங்தது. ஆனல் அவர் கைதியானதில் அவர்கள் சங்தோஷப் படாமல் இருந்திருக்க முடியாது. சிறைப்பட்ட சேனபதி, ஒய்வு நேரத்தில் விவிலிய நூலேப் படிப்பதும், சிங்தனே செய்வதுமாக இருக்தார். மகோன்னத கிலேயிலிருந்து திடீரென்று ஒரு கைதியாக மாறிவிட்டதால், அவர் உறுதியை இழங்துவிடவில்லை. உயிரை அவர் திரணமாகவே மதித்தார். மானம் போனல், அத்துடன் அவர் உயிரும் போய்விடும் என்பதை எல்லோரும் அறிந்திருங் தார்கள். கைதியான முதல் காளில் கூட அவர் தம் முடைய கம்பீரத்தையும் மிடுக்கையும் விட்டுக் கொடுக்கவில்லை. சாங் வியூ-வியாங் முதல் முறை அவரைக் கண்டு பேசவக்த பொழுது, சேனபதி ! ன்ன்று அழைத்தாராம். உடனே சியாங், நீர் என்னைச் சேளுபதி என்று அழைப்பதால் என் ஆக்கினேக்கு நீர் உட்பட்டவராக ஆகிறீர். இன்று என்னை இரண்டு விதங்களில் ர்ே கடத்த முடியும். அவைகளில் ஒன்றைத்தான் கைக்கொள்ள வேண்டும். கான் உம்முடைய மேலதிகாரி என்று நீர் கருதினால், சி. 14 -