பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 சியாங் கே-வேடிக் சுதந்திர பூமிக்கு ஓடிப் போய்விட்டார்கள் ; வயது வங்த வாலிபர்கள் தப்பிச் சென்று தேசியப் படை களில் சேர்ந்துவிட்டார்கள் ; பெரிய பெரிய ஆலை யங்திரங்களும், ரயில்பாதைகளும், உபயோகமாகும் சகல சாமான்களுமே அப்புறப்படுத்திக் கொண்டு போகப்பட்டன. ஜப்பான் தான் பிடித்த பகுதிகளே கிர்வகித்துப் பயன்படுத்த முடியாமல் தத்தளிக்கும் கிலேமை ஏற்பட்டது. யுத்த ஆரம்பத்தில் வெகு சீக்கிரத்தில் சீனுவை அடித்து விடலாம் என்று ஜப்பான் கருதியதால் கண்ணே மூடிக்கொண்டு போரில் குதித்துவிட்டது. ஆனல் பின்னல், சேற்றில் காலே மாட்டிக்கொண்ட யானே போல், அ.து முன்னும் போக முடியாமல், பின்னும் போக முடியாமல், கவிக்க வேண்டியதாயிற்று. இதற்குக் காரணம் அதன் வலிமைக் குறைவன்று. அதன் வலிமை என்ன என்பதைப் பளிபிக் யுத்தரங்கத்தில் அது பிற்காலத்தில் கிரூபித்திருக்கிறது. சீனர்களின் வலிமையும், உறுதியும், ஊக்கமுமே அதைத் திணற வைத்திருக்கின்றன. ஜப்பானின் வெற்றிகள் ஆரம்ப வெற்றிகள். பின்னல் மூன்று வருஷங்களாக அது மேற்கொண்டு முன்னேற முடியாமல் தடுத்து கிறுத்தப்பட்டது. முற்காலத்தில் எதிரிகள் சீளுவின் வட பகுதி வழி யாக வருவார்கள், அல்லது யாங்ட்வி, ஹவாங் - ஹோ, ஸிகியாங் முதலிய நதிகளின் வழியாகக் கப்பல்களில் வருவார்கள். ஜப்பானியர் இந்த இரு வழிகளாலும் வந்ததுடன், மூன்ருவதாகிய ஆகாய மார்க்கமாகவும் வங்தார்கள். வடக்கே யிருந்து வந்த படைகளே வட மாகாணங்கள் ஐங்தைப் பிடித்துக் கொண்டன. கடல் மார்க்கமாக வங்த படைகள் ஆகஸ்டு 18வ யிலிருந்து ஷாங்காய் நகரைத் தாக்கி வந்தன. ஷாங்காய் சீனுவின் பாரிஸ் என்று புகழப்பெற்ற நகர். அங்கு சீனர்களுடைய எதிர்ப்பு