பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சியாங் கே-வேடிக் களையும் அது ஒவ்வொன்ருகக் கைப்பற்றி வந்தது. 1988, அக்டோபருக்குள் சீனாவின் பிரதானத் துறை முகங்கள் பலவும் அதன் வசமாயின. பெய்ப்பிங், டீன்ட்ஸின், வு.ாங்காய், நான்கிங், கான்டன், ஹாங்கோ ஆகிய ஆறு முக்கிய நகரங்களும் அதனிடம் சிக்கியிருந்தன. காட்டின் ரயில் பாதைகளில் முக்கால் பகுதிக்கு மேலே எதிரி கைக்குப் போய் விட்டது. பெரிய யந்திரசாலைகளும் தொழிற்சாலைகளும் அதே கதியை அடைங்தன. இந்த கிலேமை ஐரோப்பாவில் தொழில் மிகுந்த நாடு எதிலாகிலும் ஏற்பட்டிருந்தால், அங்காடு அதோ கதியாகித் தீர்ந்துபோயிருக்கும். ஆனல் மிகப் பெரிய நாடாகிய சீன இதைச் சாமர்த்தியமாகச் சமாளித்துக் கொண்டு, போரை நிறுத்தாமல் நடத்திவந்தது. சேனபதி சியாங் பல வருஷங்கள் இடைவிடாமல் யுத்தம் நடக்க வேண்டியிருக்கும் என்பதை கன்ருக அறிந்திருந்தார். ஐரோப்பா யுத்தம் முடிந்து மேல் காட்டு வல்லரசுகள் உதவிக்கு வரக்கூடும் என்ற கம்பிக்கை அவருக்கு இருந்த போதிலும், சீன தன் பலத்தையே கம்பி நீண்ட காலம் போராடவேண்டும் என்று அவர் தீர்மானித்தார். அதன்படி அரசாங்கமும் ஏற்பாடுகள் செய்து வந்தது. நான்கிங், ஹாங்கோ நகர்கள் வீழ்ந்துவிட்ட பிறகு, யாங்ட்ஸி நதிக்கரையில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தள்ளியிருங்த சுங்கிங் அரசாங்கத் தலைநகராக அமைக்க்ப்பெற்றது. அங்கே இருந்து கொண்டுதான் சீனத் தலைவர் யுத்தத்தை நடத்திவங்கார். சுங்கிங் நகர் ஷெக்வான் மாகாணத்தில் இருக்கிறது. யாங்ட்ஸி கதி நகரின் நடுவே ஓடுகிறது. நதியின் இரு கரை களிலும் குன்றுகள் நிறைந்திருக்கின்றன. அவை களின் மேலே வீடுகளும், அரசாங்கக் காரியாலயங் களும் அமைந்திருக்கின்றன. சுங்கிங் சீளுவின் புராதன நாகரிகத்திற்கும் கவனாகரிகத்திற்கும் நிலைக்