பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 சியாங் கே-வேடிக் டி. ஜே. இவான்ஸ், சீன இங்கிலாந்து முதலிய நேச நாடுகளுடன் சேர்ந்திருப்பதன் காரணத்தை விளக்கியிருக்கிருர் : ஜப்பானிலும், கொரியாவிலும், மஞ்சூரியா விலும் ஜனநாயக அபிப்பிராயத்தின் கதி என்ன ஆயிற்று என்பதைச் சீன மக்கள் அறிவார்கள். ஜென்ரல் டோஜேர்*வைப் போன்றவர்களின் கையி லிருந்து சீகு எத்தகைய சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். டோஜோ கூட்டத்தார் நான்கிங்கில் சீனப் பொம்மைகளை வைத்து அவைகளைக் கயிறுகளால் ஆட்டி வைத்து வருகிருர்கள். அந்தப் பொம்மைகள் சீனக் கவுன்களை அணிந்திருந்தாலும் உள்ளே யிருப்பவை ஜப்பானியப் பட்டாளத்தின் காக்கி கிறச் சட்டைகள். அரசியல் கொள்ளைக் கூட்டத்தினரையும் ராணுவ ஆக்கிரமிப்புக் காரர்களையும் எதிர்ப்பதில் சீனப் பொது ஜனங்கள் ஆங்கில அமெரிக்கர்களுடன் ஒத்த அபிப்பிராயம் உடையவர்கள். சீனக் குடியரசு தோன்றியது முதல் அதற்கு எதிராக நின்று வருகிறவர்களைத் தோற் கடித்தால்தான் சீளுவுக்குச் சமாதானமும் சுபிட்சமும் ஏற்படும் என்பதை அவர்கள் அறிந்தே யிருக் கிருர்கள்.' சீனவிடம் மிக்க அநுதாபம் கொண்டுள்ள அமெரிக்க ஆசிரியை பேர்ல் பக் சீன முன்னேற்றத் தைக் குறித்துக் கூறுவதாவது : 'தங்தையர்கள் கன்பூவியஸின் தத்துவங்களேயும் பழைய இலக்கியங்களையும் கற்றுவிட்டு, அவைகளே எதிர்த்துக் கிளம்பினர்கள். ஆனல் இளைஞர்கள் பற்பல புதிய சக்திகளால் தாக்கப்பட்டிருக்கிருர்கள். அவர்கள் விஞ்ஞானம், கிறிஸ்தவம், காஸ்திகம், இஷ் டம்போல் காதல் கொள்ளல், கம்யூனிஸம், மேல்

  • டோஜோ - ஜப்பானியப் பிரதம மந்திரியா யிருந்தவர்.