பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 சியாங் கே-வேடிக் விலும் இது பொதுமக்களின் பெரும் போர் என்பது உண்மை." - இந்திய காட்டின் அருங்தவப் புதல்வரான ஜவாஹர்லால் நேரு 1989-ஆம் u, ஆகஸ்ட் மாதம் சீனவுக்குப் போய்விட்டு வங்தவுடன் அங் காட்டைப் பற்றி அருமையாக வர்ணித்தார். சீளுவை யாரும் கசுக்கிவிட முடியாது என்பதை அவர் தெளிவாகக் கூறியிருக்கிருர்: “ஆகாயத்திலிருந்து (குண்டு மழையில்ை)மரணம் பயமுறுத்திக் கொண்டிருக்த பொழுது சீன மக்கள் ஆச்சரியமான அமைதியுடன் கடந்து கொண்டதை நான் கவனித்தேன். யுத்தத்தின் பயங்கரமான நெருக்கடியை லட்சியம் செய்யாமல் ஒகரத்தின் வாழ்க்கை எப்பொழுதும் போல் நடந்து வந்ததைக் கண்டேன். தொழிற்சாலைகள், கோடைப் பள்ளிக் கூடங்கள், ராணுவக் கலாசாலேகள், வாலிபர் முகாம்கள் எல்லாவற்றையும் கான் பார்த்தேன். சர்வகலாசாலைகள் இருந்த இடங்களை விட்டு வேற் றுார்களில் மூங்கில் கூரைகளின் கீழே மாற்றி அமைக்கப்பட்டுப் புத்துயிரும் புது வலிமையும் பெற்று விளங்கியதையும் கண்டேன். கிராமக் கூட்டுறவு இயக்கமும் குடிசைத் தொழில்களும் வளர்ந்து வருவதைக் கண்டு நான் வியப்படைந்தேன். அறிவாளிகள், அரசியல் நிபுணர்கள், தளகர்த்தர்கள் ஆகிய புதிய சீனவின் தலைவர்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் மேலாகச் சீனுவின் தலே சிறந்த தலைவரும் சேனபதியுமான ஜெனரலிஸ்ஸிமோ சியாங் கே-வுேக்கையும் சந்தித்தேன். சீனவின் ஐக்கியத்திற்கும், தன்னை விடுதலை செய்துகொள்ள அது கொண்டுள்ள உறுதிக்கும் அடையாளமாக அவர் விளங்குகிரு.ர். சீன சமூகத்திற்கு இடைவிடாது உற்சாக மூட்டிவரும் அங்காட்டு முதன்மையான