பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 247 மறுபடி நேரும்படி சீன மக்கள் விட மாட்டார்கள். சமூகத்திலுள்ள ஒரு சிறு கூட்டத்தினர் தேசிய ஐக்கிய முன்னணியைச் சிதைக்கும்படி அவர்கள் விட்டுவிட மாட்டார்கள். எவர்களேனும் சிதைக்க முற்பட்டாலும், ஜனங்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள். ஜனங்கள் ஐக்கிய முன்னணியைப் பாதுகாக்கவே போரிடுவார்கள். ஏனெனில் அதன் மூலமே தேசீய கதிமோட்சம் ஏற்படும் என்பது அவர்களுக்குத் தெரியும்.' முக்கியமான முனைகளில் எல்லாம் செஞ்சேனை போராடிப் புகழ் பெற்றிருக்கிறது. ஜப்பானியரின் ஆதிக்கத்திலிருந்த பிரதேசங்களில் கடங்த போராட் டங்களில் ஐந்தில் நாலு களங்களில் கம்யூனிஸ்ட் படைகளே கலந்து கொண்டன. லட்சக்கணக் கான குடியானவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து, போர்ப் பயிற்சி கொடுப்பதையும் கம்யூனிஸ்டுகள் இடைவிடாது கடத்தி வங்தார்கள். செகியாங் மாகா ணத்தில் செஞ்சேனையை உலகத்தில் முதன்மை யான படை' என்று சொல்லுவது வழக்கமா யிருக்கிறது. அங்கே ஜனங்கள், படையில் சேர்ந்தால் புதிய காலாம் படையில் சேரவேண்டும்’ என்று சொல்லுவது வழக்கம். இந்தப் படை செஞ் சேனேயின் ஒரு பிரிவு. கம்யூனிஸ்டுகளின் எட்டா வது படையும், பதினெட்டாவது படையும் புரிங் துள்ள வீரச் செயல்கள் பல காடுகளிலும் பாராட்டப் படுகின்றன. கம்யூனிஸ்டுகளுடைய தலைநகர் யெனன். சுங்கிங் குக்கு அடுத்தபடியாக இது முக்கியத்துவம் பெற் றிருக்கிறது. முதல் தலைநகரைப் போலவே இதுவும் குன்றுகளால் குழப்பட்டிருக்கிறது. ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசும் பொழுது ஜனங்கள் ஒடி மறைங்து கொள்ள அந்தக் குன்றுகளில் நூற்றுக் கணக்கான குகைகள் இருக்கின்றன. யெனன்