பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 சியாங் கே-வேடிக் வாலிபத் தளபதியான சாங் ஸ-யூ-லியாங்கிடமிருந்து கம்யூனிஸ்டுகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட நகரம். கம்யூனிஸ்ட் படைகளுக்கும் கோமின்டாங் படைகளுக்கும் இடையிடையே மனஸ்தாபங்கள் நேரிடுவது வழக்கமாயிருக்கிறது. இந்த யுத்தத்திலே யும் அடிக்கடி அவை நேர்ந்திருக்கின்றன. எனினும் இரு கட்சிகளும் மிகுந்த பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் பொதுவான லட்சியத்திற்காக விட்டுக் கொடுத்து வந்தன. கம்யூனிஸ்டுகளும் கோமின்டாங் அங்கத்தினர்களும் முன்ல்ை ஒருவரை யொருவர் ஏசியும் கண்டித்தும் வந்தனர். அங்தக் காலத்தில் அவர்களுக்குள் கலகம் கடந்து வந்தது. கலகத்திலே புளுகாதவன் நரகத்திலே போவான்' என்ற வேடிக்கைப் பழமொழிப்படி அவர்கள் பரஸ்பரம் தாக்கி வந்தார்கள். கம்யூனிஸ்டுகளேயே அழித்துவிடவேண்டும் என்ற கொள்கையைக் கோமின்டாங் அரசாங்கம் முன்ல்ை பத்து வருவு, காலம் கடைப்பிடித்ததால் ஆயிரக்கணக்கான தீவிர வாதிகளும் மாணவர்களும் கொலே செய்யப்பட்டு அழிந்தார்கள்; லட்சக்கணக்கான புரட்சி மனப் பான்மை கொண்ட தொழிலாளர்களும் குடியானவர் களும் நசுக்கப்பட்டார்கள். ஆல்ை, இனிமேல் கம்யூ ணிைஸ்டுகளும் கோமின்டாங் கட்சியினரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளமாக இருக் கின்றன. சீன வெற்றி பெற்று விட்டதால், யுத்தத்தில்ை அலங்கோலமாயுள்ள தேசம் முழுவதை யும் புனருத்தாரணம் செய்யவேண்டும். அகில சீனவையும் தலைமை வகித்து நடத்தக்கூடிய திறம் படைத்தவர் சியாங் கே.வுேக் ஒருவரே என்பதை இரு கட்சியார்களும் அறிவார்கள். கால, தேச, கிலேமைகளால் சியாங்கும் பெரிய மனமாற்றத்தை அடைந்திருப்பார். கம்யூனிஸ்டுகள் வெளிகாட்டுத்