பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சியாங் கே-வேடிக் களில் ஒன்றுதான் சித்திரம் வரைவது போல் அங்கியர்க்குக் காணப் படுவதாயும் அவர்கள் சொல்லு கிரு.ர்கள். இவை எப்படியேனும் இருக்கட்டும். ஐரோப்பா கண்டத்தைவிடப் பெரிதாய், மாபெருங் கண்டம் போல் விளங்கும் சீன தேசம் முழுமைக்கும் ஒரே விதமான மொழியும் ஒரே விதமான எழுத்தும் இருப்பதே பெரிய வியப்பாகும். இவை சீனாவின் ஒற்றுமைக்குப் பெரிதும் உதவியாக நிற்கின்றன. சில மாகாணங்களில் பேசுகின்ற மொழியில் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆயினும் சீன முழுதும் ஒரேவித எழுத்தே நிலவி வருகிறது. கவிதையில் இந்தியாவைப் போலவே சீனவும் என்றுமே தலைசிறந்து கிற்கிறது. சீனக் கல்விமான்கள் எல்லோருமே கவிவாணர் என்று வேடிக்கையாகச் சொல்லுவது உண்டு. படித்தவர்க்கே முதல் மரியாதை என்ற விதியைக் கடைப்பிடிக்கும் காட்டில், பல நூற்ருண்டுகளாக அமைதியில் திளைத்து, சாங்தி, சாங்தி என்று ஜபித்துக்கொண் டிருக்கும் காட்டில் கவிவாணர் பெருகுவதற்குத் தடை ஏது ? வீரத்தைப் புகழும் கவிவாணர், வீரத்தோடு காதலைச் சேர்த்துக் காவியங்கள் கட்டும் புலவர்கள், இயற்கையோடு இரண்டறக் கலங்து இசைபாடும் கவிகள், கண்ணுக்குப் புலப்படும் பொருள்களின் உட்கருத்தை அறிந்து பாடும் கவிவாணர், மக்கள் சமுதாயத்தி லுள்ள ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு உள்ளம் துடிக்கும் கருணைக் கவிகள், கற்ப ைசக்தியுடன் உயரே பறந்து வானமண்டலத்தில் வட்டமிடும் கவிவாணர் - இப்படிப் பலதிறப்பட்ட கவிவாணர்கள் இன தேசத்தில் கவி பாடி வந்திருக்கிருர்கள். 'தெய்விக வாளேந்தி, நெடுங்கடலுள் நீந்திவரும் திமிங் கிலத்தை வீசேனே ? என்று லீ-போ என்ற ஒரு கவி கூறியிருக்கிருர். இவர் மது அருங்தி, ஓர் ஒடத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, தெளிங்த நீரில்