பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனவின் புராதன நாகரிகம் 27 அமைத்துக்கொண்டு விவாகம் கடத்துதல், காலத்தை அளந்து கணக்குப் படுத்திப் பஞ்சாங்கம் ஏற்படுத்தல் ஆகியவை எல்லாம் பதியிைரம் வருஷங்களுக்கு முன்பே இருந்ததாகச் சீன சரித்திரங்கள் விவரிக் கின்றன. கி. மு. 3,700-ஆம் வருஷத்தில் ஆண்டு வந்த மஞ்சள் மன்னர்' என்று அழைக்கப்படும் ஹ-வாங்-டீ என்பவர் தலைக்கு அணியும் குல்லா வையும், உடைகளையும், வண்டி ஒடம் ஆகிய வாகனங் களேயும், வில் அம்புகளையும், உலோக நாணயம் போன்ற பல பொருள்களையும் புதிதாக அமைத்துக் கொடுத்ததற்காகச் சீனர்கள் அவரை மறவாமல் பாராட்டி வருகிருர்கள். இவ்வாறு உணவு, குடியிருப்பு உடை முதலிய வசதிகள்ை முதலில் பெற்று, போக்கு வரத்துச் சாதனங்கள், வைத்தியம், வான சாஸ்திரம், எழுத்து, இலக்கியம் முதலியவைகளையும் சீனர்கள் முறையாக அமைத்துக் கொண்டிருந்தார்கள். பின்பு ஒழுக்க முறைகளும், விதி-விலக்குகளும், மதமும், தத்துவ ஞானமும் வளர்ந்தன. இவை ளியா, ஷாங், செள் என்ற மூன்று வம்சத்து மன்னர்களின் ஆட்சியில், கி. மு. 2000-1000 வருஷங்களுக்கு இடையில் உச்ச நிலையை அடைந்திருந்தன. சீன சரித்திரத்தில் இதை மகோன்னதமான காலமாகக் குறிப்பிடுகிருர்கள். விஞ்ஞானத்தின் பிறப்பகம் சீன. சிற்பம், உலோக ஆராய்ச்சி, கட்டடக் கலை, தச்சுத் தொழில், மிருக வர்க்க ஆராய்ச்சி, தாவர வர்க்க நூல் முதலியவை பற்றி, 3,000 வருஷங்களுக்கு முன்பாக அங்கே பாடங் கள் கற்பிக்கப்பட்டு வந்தன. அரசியல் தத்துவங்களும், சமூக சாஸ்திரமும், போர் முறைகளும் தொன்று தொட்டே ஆராயப்பட் டிருக்கின்றன. இவைகளே யெல்லாம் முறைப்படுத்தியும் வைத்திருந்தனர். மேலும், திசை காட்டும் கருவி, எழுதும் தாள், அச்சு, வெடிமருந்து ஆகிய உலகத்திற்கு இன்றியமை