பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - சியாங் கே-ஷேக் சீனவின் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு அபினியை ஒட்டி ஏற்பட்டதாகும். இந்த லாகிரி வஸ்துவைச் சீனர்கள் மருந்துகளுக்காக வாங்கி வங்தார்கள். இதை மிகவும் குறைந்த அளவிலேயே வாங்கவேண்டும் என்று சீன அரசர் விதி செய் திருந்தார். இங்தியாவில் கிலேபெற்றிருந்த ஆங்கிலக் 'கிழக்கிந்தியக் கம்பெனியார் வங்காளத்தில் அபினை உற்பத்தி செய்து, சீனுவில் கொண்டுபோய் விற்ப தற்காக 1773-இல் ஒரு விசேஷ அது மதியைப் பெற்ருர்கள். சீன வின் தெற்குத் துறைமுகமாகிய கான்டனில் அவர்கள் அபினை ஏராளமாகக் கொண்டு போய்க் குவிக்கத் தொடங்கினர்கள். ஆங்கிலேய ருடைய அரிய முயற்சியால் 16-வருவத்திற்குள் சீனவில் சந்தைகள் கடைகளிலெல்லாம் அபினி தாராளமாய்க் கிடைத்து வங்தது. இதல்ை லட்சக் கணக்கில் சீனவை விட்டுப் பணம் வெளியேறியது. லட்சக் கணக்கான சீனர்கள் அபினியைத் தின்றும், புகைத்தும், அதற்கு அடிமைப்பட்டு, ஒழுக்கம் கெட்டு, உடலும் தளர்ந்து போர்ைகள். தேசம் முழுதும் அபினி மயமாயிற்று. 'என் தேசத்தின் நீண்ட காலச் சரித்திரத்தில், என் தேசமும், என் ஜனங்களும் எத்தனையோ விதமான தீமைகளுக்கும் அபாயங்களுக்கும் உள்ளாகி யிருக்கிருர்கள். ஆனல், இந்த அபினி வழக்கங்தான், அவை எல்லாவற்றிலும் மிகவும் அபாயகரமானதாக இருந்திருக்கிறது என் பதில் சந்தேகமில்லை என்று சீனப் பேராசிரியர் டான் யுன்-ஷான் சொல்லுகிருர், அபினி சீன சமூகத்தையே உருக்குலைத்துவிட்டது. இதல்ை சீன அரசாங்கம் சாமர்த்தியசாலியான ஒரு புது கவர்னரைக் கான்டன் துறைமுகத்திற்கு நியமித்து, அபினி இறக்குமதியைத் தடுக்க ஏற்பாடு செய்தது. கவர்னர் உடனே நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டார். வெளிகாட்டு வியாபாரிகளிடம்