பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சியாங் கே-வேடிக் போட்டியிட்டுச் சீனவில் வர்த்தகம் செய்யும் நிலைக்கு வங்து விட்டார்கள். அவர்கள் சீனர்களோடு நெருங்கிப் பழகி, வர்த்தகத்திலும் தக்க லாபமடைந்து வங்தார்கள். வியாபாரிகளைப் பின்பற்றி கிறிஸ்தவ மதப் பிரசாரகர்களான மிஷனரிகள் சென்ருர்கள். இவ்வாறு ஆதியில் வர்த்தகமும் கிறிஸ்தவ மதப் பிரசாரமுமே சீனவில் அமெரிக்காவின் அபிலாஷை களாக இருந்தன. வர்த்தகத்தைத் தொடர்ந்து மதப் பிரசாரமும் ஆதிக்கமும் பரவும்படி செய்வதே வெள்ளைக்காரர்கள் கீழ் நாடுகளில் தொன்றுதொட்டுக் கையாண்டு வந்த முறையாகும். வேதப் புத்த கத்தைத் தொடர்ந்து வெடிகுண்டுக் கப்பலும் வரும்’ என்று சீனர்கள் சொல்வது வழக்கம். இடையில் அமெரிக்க அரசாங்கத்திற்குச் சீன வர்த்தகத்தில் மிகுந்த அக்கறை ஏற்பட்டது. வுடன் உடன்படிக்கை செய்துகொண்டு வருமாறு 1843-இல் ஒரு கமிஷன் அனுப்பப் பெற்றது. மறு வருஷம் ஜூலை 8வட சீன - அமெரிக்க உடன்படிக்கை ஏற்பட்டது. அமெரிக்கர்களுக்கும் பிரிட்டிஷாரைப் போல் வர்த்தகம் செய்யும் உரிமைகள் அளிக்கப் பட்டன. கான்டன் துறைமுகத்தில் கண்டபடி யெல்லாம் வசூலிக்கப்பட்டுவந்த சுங்கத் தீர்வைகள் முறைப்படுத்தி அமைக்கப்பட்டன. மதப் பிரசாரத் திற்கும் வசதிகள் அளிக்கப்பட்டன. வர்த்தகர்களும், மிஷனரிகளும் சீன அரசாங்கச் சட்டங்களுக்கு உட்பட வேண்டியதில்லை என்ற விசேஷ உரிமையும் அளிக்கப்பட்டது. பின்னல் நாளடையில் சீனவில் அமெரிக்க அபிலாஷைகள் அதிகமாகவே, சீன அரசியலைப் பற்றியும் அங்த நாடு கவலைகொள்ள ஆரம்பித்தது. 1858, 1868, 1908-ஆகிய வருஷங் களில் அமெரிக்கா மேலும் சில உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. கடைசியான உடன்படிக்கை 1903-ல் செய்துகொள்ளப் பட்டதுதான் முதலில்