பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனவும் வல்லரசுகளும் *|| பெற்ற உரிமைகள் இவைகளால் மேலும் உறுதி செய்யப்பட்டன. இவைகளால் எற்பட்ட முக்கிய நன்மைகள் : அமெரிக்கர் சீனச் சட்டங்களுக்கு உட்படாமல் இருக்கும் உரிமை, வர்த்தகத்திற்குத் திறந்துவிட்ட துறைமுகங்களில் தங்கியிருக்கவும் வர்த்த்கம் செய்யவும் உரிமை, உள் நாட்டில் பிரயாணம் செய்யும் உரிமை, சீனவிலுள்ள தங்கள் இனத்தவர்களையும் சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, உள் காட்டில் கப்பல் போக்கு வரத்திற்கு உரிமை. ஐரோப்பாவில் அரசாங்கங்கள் சீனவோடு வர்த்தகம் செய்யும் உரிமையைப் பல கம்பெனி களுக்கு விற்று ஏராளமான லாபமடைந்து வந்தன. சீனச் சக்கரவர்த்தியும் அங்கியரோடு வர்த்தகம் செய்யும் உரிமையை உள் காட்டு வியாபாரிகளுக்கு விற்று வந்தார். இதல்ை அவர்களிலும் அநேகர் பெருஞ் செல்வர்களாயினர். ஐரோப்பிய வர்த்தகர்கள் 100-க்கு 500, 600-விகிதம் லாபமடைந்து வங்தனர். 1842-இல் பிரிட்டிஷ் உடன்படிக்கையாலேயே சீனாவின் பாதுகாப்புச் சுவர் தகர்ந்துவிட்டது. அதல்ை பின்பு வெளிநாட்டு வர்த்தகம் தழைத்து வளர்ந்ததில் வியப்பில்லே. 1856-இல் பிரிட்டனும் பிரான்ஸும் சேர்ந்து மீண்டும் சீனவோடு யுத்தம்செய்து, யாங்ட்ஸி நதிக் கரையில் புகுவதற்கும், புதிதாக ஏழு துறை முகங்களில் வியாபாரம் செய்வதற்கும் உரிமை பெற்றன. 1870-இல் ஆங்கில ராஜதந்திரி ஒருவர் சீனவில் கொலையுண்டதற்காக மேலும் ஐந்து துறை முகங்கள் திறந்துவிடப் பட்டன. புதிய வல்லரசான ஜப்பான், ஏகாதிபத்திய வெறியுடன், 1894-இல் சீனுவுடன் போர்தொடுத்து, கொரியாவையும், போர் மோஸா தீவையும் பிடுங்கிக்கொண்டது. பிறகு