பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சியாங் கே-வேடிக் கஷ்டஈடாகவும் அங்கியர்களுக்குக் கட்டிவர நேர்ந்தது. 'சக்கரவர்த்தி அங்கியக் கடன்காரர்களுக்கு வட்டி வசூலிக்கும் ஏஜண்டாக அமர்ந்திருங்தார்!’ என்று சொல்லவேண்டிய நிலைக்கு வந்து விட்டார். பெரும்பாலான சீனத் துறைமுகங்கள் பறிக்கப் பட்டுப் போயின. உள்நாடு எங்கனும் வர்த்தகம் செய்யும் உரிமைகள் வெளி காட்டார்களுக்கு நல்ல வசதி அளித்தன. பலத்தவர் கையில் இளைத்திருந்த சீன ஒரு துரும்பாக அல்லாடிக் கொண்டிருந்தது. இத்துடன் வெளிகாடுகள் சீனவில் வர்த்தகம் செய்ய முற்பட்ட ஒரு சகாப்தம் முடிவாயிற்று. இதன் பிறகு வல்லரசுகள் தங்கள் மூல தனங்களேப் பெருவாரியாகச் சீனவில் கொண்டுவந்து முடக்கி, அதன் மூலம் லாபமடைய வழிதேட ஆரம்பித்தன. நாடுகளே ஆயுதம் தாங்கி எதிர்த்து ஜயிக்கும் பழைய முறையைக் காட்டிலும் இது அதிக ஆழமாகப் பாயும் முறை. இது நெடு நாள் நிலைத்தும் கிற்கும். திடீரென்று வல்லரசுகள் சீனுவில் பல இடங் களிலும் ரயில் பாதைகள் போடவேண்டும் என்று ஆரம்பித்தன. 1894-இல் ஜப்பான் சீனுவின்மேல் போர்தொடுத்து வெற்றி பெற்றதும், சில தீவுகளையும் நஷ்டஈட்டையும் பெற்றுக் கொண்டதோடு, சீன வில் பெரிய தொழிற்சாலைகள் அமைத்துக் கொள்ளவும் அநுமதி பெற்றது. உடனே ஜெர்மனியும், பிரிட் டனும், பிரான்ஸும் சில பிரதேசங்களைப் பிடித் துக் கொண்டு, ஒவ்வொன்றும் வெவ்வேறு மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. ரயில் பாதைகள் அமைக்கவும், சுரங்கங்களைத் தோண்டவும் அவைகள் உரிமை பெற்று ஒன்ருேடொன்று போட்டிபோட் டன. அங்கியர்களுக்கு எதிராகச் சீனர்கள் மூச்சுவிட். டாலும் குற்றம். அவர்கள் வயிற்றெரிச்சலுடன் சிறு கிளர்ச்சியோ கலகமோ செய்தால், உடனே அதற்கு கஷ்ட ஈடாக வர்த்தக ஸ்தலங்கள், அபராதங்கள்,