பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சியாங் கே-வேடிக் தீர்மானித்தது. ரஷ்யாவின் ஜார் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து கின்ற அகிகாரிகள், கிழக்கே ரஷ்யாவுக்கு ஒரு சாம்ராஜ்யத்தையே படைத்துக் கொள்ளலாம் என்று கனவு கண்டார்கள். 1891-இலேயே லைபீரிய ரயில் வேயை அமைக்க ஆரம்பித்து, அவர்கள் கொரியா தேசத்தின் நட்பைப் பெறவும் வேலை செய்து வந்தார்கள். தக்க துறைமுகம் தேடி ரஷ்யக் கப்பல்கள் சீனக் கடற்கரையைச் சுற்றி வட்ட மிட்டன. பிரான்ஸ் ரவி; யாவுக்கு உதவியா யிருந்த துடன், இங்தோ-சீனுவில் தன் அதிகாரத்தையும் நிலைநாட்டிக் கொண்டு, சீனுவின் தென் மாகாணங் களில் மூலப் பொருள்களைத் தேடி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. ஜெர்மனியும் தன் சக்தியைப் பெருக்கிக்கொள்ள முன் வந்தது. ஏகாதிபத்திய வேட்டையில் அது கடைசியாகக் கலந்துகொண்டிருப்பினும், ஜெர்மன் ராஜதந்திரிகளின் கண் சீனுவின்மேல் பதிந்திருந்தது. ஜெர்மானியரின் உரிமைகளேப் பாதுகாக்க ஜெர்மன் கப்பல்களும் சீனக் கடலில் வட்டமிட்டு வங்தன. கொரியா சம்பந்தமாகச் சீனு, ரஷ்யா, ஜப்பான் மூன்றுக்கும் போட்டி ஏற்பட்டது. இதன் காரண மாகத்தான் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் 1894-இல் யுத்தம் மூண்டது. அதில் ஜப்பான் வெற்றி பெற்றதால், முதல் முதலாக ஆசிய நிலப் பரப்பில் அதற்கு இடம் கிடைத்தது. அதுவும் ஒரு வல்லர சாகப் பரிணமிக்க வழி பிறந்தது. 1895-இல் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி ஜப்பான் மஞ்சூரியாவில் லியா ஒடுங் தீபகற்பத்தைப் பெற்றுக் கொண்டது. திடீரென்று ஜப்பான் வல்லமை பெற்று வளர்வது, மற்ற வல்லரசுகளுக்குச் சகிக்க வில்லை. ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மூன்றும் சேர்ந்து, லியா ஒடுங்குக்குப் பதிலாக வேறு கஷ்ட ஈடு வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிட வேண்டும் என்று