பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சியாங் கே-வேடிக் ஆதாயமில்லாமல் இப்படிச் செய்யவில்லை. கஷ்ட ஈடாகக் கிடைத்த பெரும் பொருள்களைக் கொண்டு, பின்னல் அவர்கள் தொழில்கள் செய்து, கோடி கோடியாகப் பணம் திரட்டியிருக்கிருர்கள். புதிய யுத்தங்களில் தோற்ற காடுகளிடமிருந்து கஷ்டஈடாக வாங்கப்பட்ட பெருங் தொகைகளும், யுத்தங்களுக்குச் சாமான்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் ஒப்பந்தங்களில்ை கிடைத்த லாபங்களும் அவர்களுடைய செல்வப் பெருக்குக்கு உதவி செய்தன. சீனவிடமிருந்து முப்பது கோடி யென்னும் ரஷ்யாவிடமிருந்து இருபது கோடி யென்னும் யுத்த நஷ்ட ஈடாக வாங்கப்பட்டன. யுத்தங்களால் பிரபுக்களுக்கு ஏராளமான பண லாபம் கிடைத்ததோடு, புது நாடுகளும், அவைகளின் மூலப் பொருள்களும் கிடைத்து வந்தன. இவைகளால் ஜப்பானியப் பிரபுக்களுடைய பெரிய தொழில் ஸ்தாபனங்களான மிட்ஸுயி, மிட்ஸ்-சபிவழி, ஸ்-சமிடோமோ, யஸ்ாதா, ஒகுரா, புருகாவா, குஹாரா முதலியவை கோடிக் கணக்கில் லாபம் பெற்றுக் கொழுத்து வளர்ந்தன. இவையெல்லாம் ஜப்பானியப் பிரபுக்களின் குடும்பப் பெயர்களை வைத்து கடந்து வரும் ஸ்தாபனங்கள். மொத்தத்தில் ஜப்பானே ஆண்டுவரும் பிரபுக்கள் ஐந்தே குடும்பங் களைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவை அறுபது குடும்பங்கள் ஆண்டு வருகின்றன ; முதலாளித்துவ முறையில் அதைப் பின்பற்றும் ஜப்பான் ஐந்து குடும்பங்களின் சொத்தாக அமைந்து விட்டது அதிசயமான விஷயமாகவே இருக்கிறது ! 1914-ஆம் வருஷத்திற்கு முன்பே ஜப்பான், அமெரிக்கா இங்கிலாந்து முதலிய நாடுகளைப்போல், யென் சுமார் ரூ 1-8-0 மதிப்புள்ள இப்பானிய காணயம்; 1989-இல் அதன் மதிப்பு சுமார் 14 அணுவாக இருந்தது.