பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ன் யாட்-லென் 65 இத்தகைய தலைவர்களில் மாபெருங் தலைவர் என்று போற்றக் கூடியவராக விளங்கியவர் ஸன் யாட்-ஸென். இவரே சீனப் புரட்சியைத் தலைமை வகித்து கடத்தியவர். இவர் முதலில் ஸ்தாபித்த :புரட்சிச் சங்கத்தில் 18-அங்கத்தினரே இருந்தனர். இவர்களில் 17-பேர் மரண தண்டனை அடைக் தனர். எஞ்சியவர் ஸன் ஒருவரே. இவர் பத்து முறை புரட்சிசெய்து தோல்வியுற்று, ஒடி ஒடி ஒளிந்து கொண்டார். ஆனல் மனம் ஒடிங்து சோர்ந்து விடவில்லை. ஒவ்வொரு தோல்வியையும் வெற்றிப் படியாக அமைத்துக் கொண்டார். கடைசியில் இவரே மிகப் பெரிய நாடான சீனவின் குடியரசுத் தலைவராக வந்தார். இவரே புத்துயிர் பெற்ற புதிய சீனவின் தங்தை என்று கோடிக் கணக்கான சீனர்கள் கொண்டாடுகிருர்கள். கம் முடைய ஈடும் எடுப்புமில்லாத தலைவர் மகாத்மா காந்தியைப் பற்றி, 'உள்ளம் உருகுது கள்ளம் கருகுது உத்தமன் காந்தியை நினைத்துவிட்டால் வெள்ளம் பெருகிடக் கண்ணிர் வருகுது வேர்க்குது இன்பம் தேக்குதடா...' என்று நாம் போற்றுவது போலவே, சீன மக்கள் ஸன் யாட்-லென்னைப் போற்றுகிருர்கள். சுமார் 59-வருவும் உலகில் வாழ்ந்து, வாழ்க்கை முழுதும் கோடி கோடியாய்ப் பணம் சேகரித்துப் புரட்சிசெய்து, கடைசியில் சக்கரவர்த்திகளும் கண்டு பொருமைப் படத்தக்க குடியரசுத் தலைமைப் பதவியை வகித்த இந்த அறிஞர், 1925-இல் மரிக்கும் - - --—

  • வன் யாட்-லென்-இவருக்கு நான்கு பெயர்கள் உண்டு: சிறு வயதில் டெய்சியோங் ; விவாகமான பின் டக்-மங்; பிறகு எலன் யாட்-ளென் ; கடைசியில் இவர் கையெழுத்துப் போட்ே வத்தது ஸன் வென். -

бR. 5