பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சியாங் கே-வேடிக் எலன் யாட்-லென் சிறு வயதில் கிராமப் பள்ளிக் கூடத்தில் படித்திருந்தார். பிறகு ஹவாய் தீவுக்குச் சென்று, அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த தம்முடைய சகோதரரின் உதவியால் ஆங்கிலக் கல்லூரியில் சேர்ந்து படித்து வங்தார். ஹவாயில் எங்கும் ஆங்கில மயங்தான். உபாத்தியாயர்கள் எல்லோரும் ஆங்கிலேயர்கள். ஸன் வெகு சீக்கிரத்தில் ஆங்கில பாஷையைக் கற்றுக்கொண்டு பரிசுகளும் பெற்ருர். பள்ளிக்கூடத்தில் இருக்கும் பொழுதே கிறிஸ்தவ மதத்தில் சேரவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அதுமுதல் சிந்தனையில் அவர் கிறிஸ்த வராகவே மாறி விட்டார். அவருடைய தந்தையும் தமையனரும் கன்பூவதியஸ் மதத்தைச் சேர்ந்தவர்கள். சீனர்களுக்குள் தமையனர் தகப்பருைக்குச் சம மானவர். ஸன் அண்ணனிடம் சென்று அநுமதி கேட்டார். அண்ணன் பலமாகக் கோபித்துக் கண்டித்தார். தங்தையாரும் உடனே பையனைச் சீனவுக்கு அனுப்பும்படி எழுதினர். ஸன் ஊருக்குத் திரும்பியிருங்த சமயத்தில்தான் விக்கிரகத்தை உடைத்த சம்பவம் கடந்தது. அதல்ை அவர் மீண்டும் வெளியேற நேர்ந்தது. அவர் கான்டன் நகருக்குச் சென்ருர். அங்கே ஒர் ஆங்கிலோ அமெரிக்க ஆஸ்பத்திரியில் சுமார் ஒரு வருஷம் 'ஆர்டர்லி'யாக வேலை பார்த்தார். ஆஸ்பத் திரியில் இருந்த டாக்டர் கெர் என்பவருக்கு அவரிடம் மிகுந்த பிரியம் ஏற்பட்டது. அப்பொழுது சீனர் களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக ஹாங்காங்கில் ஒரு வைத்தியக் கல்லூரி அமைக்க ஏற்பாடு கடந்து வந்தது. ஸன் அதில் சேர்ந்து படிக்க விரும்பினர். இடையில் அவருக்கு விவாகம் செய்துவைக்க வேண்டு மென்று கருதி அவருடைய தங்தை லுTஷா என்ற மாதை அவருக்கு விவாகம் செய்துவைத்தார். பிறகு