பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸன் யாட்-லென் 73. பொதுவாகச் சீனவின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் கான்டன் பகுதியில் மக்கள் மஞ்சு மன்னர்களை அதிகமாய்த் துவேஷித்து வந்தார்கள். ஏதாவது ஓரிடத்தில் கலகம் தோன்றில்ை, நாடெங்கும் புரட்சி ப்ற்றிக்கொள்ளும் என்று அவர்கள் கருதி ஞர்கள். டாக்டர் ஸ்ன்னுடைய கல்விச் சங்கம் புரட்சிக்காரர்களுடைய சதியாலோசனை மண்டப மாயிற்று. வெளிப்படையாக வருவதற்கு முன்னல் எல்லா வேலைகளையும் அந்தரங்கமாகவே செய்து வரவேண்டும் என்று ஸன் ஏற்பாடு செய்திருந்தார். ஆயுதங்கள் சேகரிக்கப் பணம் தேவையா யிருந்தது. சிறுவயதில் ஸன்னுடன் கோயில் விக்கிரகத்தை உடைக்கச் சென்ற நண்பர்களில் ஒருவனை ஹோடுங் தன்னுடைய நிலங்கள், மனைவியின் நகைகள் எல்லாவற்றையும் விற்றுக் கிடைத்த பணம் முழு வதையும் கொணர்ந்து கொடுத்தான். மற்றவர்களும் அவரவிரால் இயன்ற அளவு பொருள் கொடுத்தார்கள். ஆயுதங்களும் வெடிமருந்தும் கல்விச் சங்கக் காரியா லயத்தில் சேகரித்து வைக்கப்பட்டன. ஆனால், ஒற்றர் மூலம் அதிகாரிகள் விஷயமறிந்து, சோதனையிட முற்பட்டு விட்டனர். ஹோ டுங், ஆபத்து வருவதை அறிந்து, டாக்டரைக் கான்டன் நகரை விட்டே வெளியேறும்படி செய்து, காரியால யத்திலிருந்த கடிதங்களேயும் குறிப்புக்களையும் கொளுத்திவிட முயன்முன். அவனுடன் வேறு நான்கு நண்பர்களும் இருந்தனர். அவர்களுடைய வேலை முடியுமுன்பே அதிகாரிகள் வந்து அவர்களைக் கைது செய்து விட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நால்வர் சிரச்சேதம் செய்யப்பட்டனர். ஒருவன் சிறையிலேயே இறந்து விட்டான். அவர்கள் தேசத்திற்காக உயிர்ப் பலி கொடுத்த தியாகிகளாகக் கருதப்பட்டனர். அவர்க ளுடைய தியாகத்தினல் ஸன் உயிர் தப்ப முடிந்தது.