பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சியாங் கே-வேடிக் பிற்காலத்தில் அவர் ஹோ டுங்கைப் பற்றி மிகவும் பாராடடி வகதாா. ஸன் பல கஷ்டங்களே அநுபவித்துக் கொண்டு ஹாங்காங் போய்ச் சேர்ந்தார். அங்கே நண்பர்களின் உதவியால் தலை மறைவாக இருந்து வந்தார். ஏனெனில் அதிகாரிகள் அங்கேயே அவரைப் பிடித்துக் கடத்திக்கொண்டு போய்விடக்கூடும் என்ற பயம் இருந்தது. அங்கிருந்து அவர் ஜப்பானிலுள்ள கோப் நகரத்திற்குப் பிரயாணமானர். பிரயாணத் திற்கு வேண்டிய வசதிகளேத் தோழர்கள் செய்து கொடுத்தார்கள். அப்பொழுதுதான் 1895-ஆம் வரு வடித்துச் சீனு - ஜப்பான் யுத்தம் முடிந்திருந்தது. ஜப்பானில் இருந்தாலும் அவர் பிடிபட்டிருக்கக்கூடும். அதனுல் அவர் ஹவாய் தீவுக்குப் போய் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டு விட்டார். அப்பொழுது அவர் மீசை வைத்துக்கொண்டு மேல்நாட்டு உடைகள் அணிந்து, மாறு வேஷத்துடன் காணப்பட்டார். வழியில் ஹானேலுலுவில் சீன நண்பர்கள் அவருக்கு 6,000 டாலர் நிதி சேர்த்துக் கொடுத்தனர். அமெரிக்காவிலும் அவரைச் சனி பின்தொடர்ந்து சென்றது. அங்கிருந்த சீன ஸ்தானிகர் அவரைப் பிடித்துக்கொண்டு போகப் பெருமுயற்சி செய்தார். அமெரிக்காவிலிருந்த சீனர்களுக்கு எலன் தம் கருத்தை விளக்கிப் பிரசாரம் செய்து, தக்க உதவி பெற்று, அங்கிருந்து இங்கிலாந்துக்குச் சென்ருர் 1896-இல் சீமைக்குச் சென்ற்தும் அவர் தம் முடைய பழைய வைத்திய குருவாகிய டாக்டர் கான்ட்லீயுடன் தங்கியிருந்தார். ரகசிய ஒற்றர்கள் தம்மைக் கண்டுகொள்ளாதபடி அவர் கவனமாகவே இருந்து வந்தார். இதுவரை ஒரு தேசத்திலிருந்து மறுதேசம் போகும் பொழுதெல்லாம் அவர் புதுப் புதுப் பெய்ராக மாற்றி வைத்துக்கொள்வது வழக்கம்.