பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ன் யாட்-லென் 75 - ஆயினும் சூழ்ச்சியில் சீன அரசாங்கம் அவரை வென்று விட்டது. எலன் அதி னுடைய எமன் அல்லவா? ஒரு நாள் மாதா கோயிலில் பிரார்த்தனை செய்வதற்காக கடந்து போய்க்கொண் டிருந்தபோது எதிரிகள் கையில் அவர் சிக்கிவிட்டார். பிடித்தவர்கள் னே ஸ்தானிகர் காரியாலயத்திலிருந்து அனுப்பப் பட்ட இரண்டு சீனர்கள். ஸன் லண்டனிலிருந்த சீன ஸ்தானிகர் காரியாலயத்தில் பங்தோபஸ்தாக அடைத்து வைக்கப்பட்டார். எமன் வாயிலிருந்து மீண்டாலும் அதிலிருந்து மீள முடியாதுபோலிருந்தது. அவர் அடைபட்டிருப்பதைப் பற்றி வெளியே தகவல் அறிவிக்க முடிந்தால் தப்ப வழி கிடைக்கும். ஆல்ை காவலும் கட்டும் அதிகமாயிருந்தது. என் சிட்டுக்கள் எழுதி, அவைகளில் ஏராளமான பணத் தைப் பொதிந்து, தாம் இருந்த அறையின் ஜன்னல் வழியாக வழி நடையில் எறிந்துகொண்டிருந்தார். யாராவது வேலைக்காரர்கள் பண ஆசை, கொண்டு அவைகளில் ஒன்றை டாக்டர் கான்ட்லீயிடம் சேர்ப் பிக்க மாட்டார்களா என்று அவர் ஏங்கிக்கொண் டிருந்தார். பன்னிரண்டு நாட்களாக அவர் தவித்துக்கொண் டிருந்தார். ஆண்டவனே எண்ணித் துதித்தார். அவர் ஒரு பைத்தியக்காரர் என்று சொல்லிக் கப்பலில் ஏற்றிச் சீனுவுக்கு அனுப்பிவிட ஏற்பாடு கடந்தது. ஆனல் கடைசியில்,ஒர். ஆங்கில வேலைக்காரன் அவ ருக்குத் துணை புரிங்தான். அவனுடைய மனேவி மூலம் ட்ாக்டர் கான்ட்லீக்குத் தகவல் தெரிந்தது. பிரிட்டிஷ் அதிகாரிகளின் உதவியால் அவருக்கு விடுதலை கிடைத்தது. சீமைப் பத்திரிகைகள் எல்லாம் அவரைப் பற்றி விரிவாகச் செய்திகள் பிரசுரித்தன. இதிலிருந்து அவர் உலகப் பிரசித்தமான தலைவராகி விட்டார்.