பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லன் யாட்-ஸென் 77 இங்கிலாந்து முதலான நாடுகளில் யாத்திரை செய்து விட்டுத் திரும்பினர். கான்டன் நகரில் இருந்து கொண்டு, 1904-இல் அவர் மூன்ருவது முறை புரட்சிக்கு ஏற்பாடு செய்து வந்தார். ஹாங்காங்கி லிருந்து ஒரு வியாபாரி விலாசத்திற்குச் சிமிண்டுப் பீப்பாக்களில் துப்பாக்கிகளும் வெடிமருந்தும் ஏராள மாய் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. உள்காட்டி லிருந்த புரட்சி வீரர்கள் ஆங்காங்கே தயாராக வைக்கப்பட்டிருந்தனர். ஹாங்காங்கிலிருந்து 3,000 கூலிகளையும் வரவழைத்துக் கலகத்திற்குப் பயன் படுத்திக் கொள்ளவும் தீர்மானிக்கப் பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், கூலிகளே அனுப்பச் சங்கடம் ஏற்பட்டு விட்டதாக ஹாங்காங்கிலிருந்து தங்தி வந்தது. - அத்துடன் கப்பலிலிருந்து இறக்கப்படும் பொழுது சிமிண்டுப் பீப்பாக்களில் ஒன்று விழுந்து உடைந்துபோனதால், உள்ளேயிருந்த சரக்குகளே அதிகாரிகள் கண்டுகொண்டார்கள். அதிகாரிகளுக்குச் சங்தேகம் கிளம்பிவிட்டது. இதல்ை புரட்சியை ஒத்தி வைத்துவிட்டு, கூலிகளே அனுப்பவேண்டாம் என்பதற்குச் சங்கேதமாக ஸன் பதில் தந்தி கொடுத்தார். அவர் த்ந்தி போகுமுன்பு கூலிகள் வங்துவிட்டனர். அவருக்குத் தகவல் இல்லே. கூலிகளுக்கு ஒரு விஷயமும் தெரியாது. அவர்கள் கண்டபடி சுற்றித் திரிந்து வந்ததால் அதிகாரிகளுக்குச் சந்தேகம் அதிகரித்தது. கடைசியில் கூலிகளிற் பலர் உயிரிழக்க நேர்ந்தது. ஸன் தம் நண்பர்கள் எல்லோரையும் பல இடங்களுக்குப் பிரித்தனுப்பி விட்டார். அவரும் சாங்-சா என்ற நண்பரும் செம்படவ ஸ்திரீகளைப் போல் மாறுவேஷம் பூண்டு ஒர் ஒடத்திலேறி வெளியே சென்று விட்டனர். புரட்சிக்காரருடைய தலைமைக் காரியாலயத்திற்குச் சமீபமாக சுற்றிக்கொண்டிருந்த பதினறு பேர்களேக்