பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சியாங் கே-வேடிக் எதிரிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட வெடி மருந்து களைப் பின்னல் உபயோகிப்பதைப் பார்க்கிலும் முன் குடியே செலவிட்டு விடலாம் என்று கலகத்தை ஆரம் பித்து விட்டார்கள். இங்தப் புரட்சியில் அதிக இரத்தப் பெருக்கும் உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. அரசாங்கப் படைகள் கலகக்காரரோடு சேர்ந்து கொண்டன. இரண்டு மாதத்தில் பதினொரு மாகா ணங்கள் மஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலே பெற்றன. தலைவர்கள் கூடி டாக்டர் ஸன்னேக் குடியரசுத் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்து, லண்டன் நகரி லிருந்த அவருக்குத் தகவல் கொடுத்தார்கள். ஸ்ன் லண்டனே விட்டுப் புறப்பட்டு, பாரிஸ், மர்ளில்ஸ் வழியாகச் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். அங்கே யிருங்த சீன மக்கள் சீன தேசத்தின் விடுதலை வீரராக அவரை வரவேற்று உபசரித்தனர். ஷாங் காய் நகருக்கு வங்து ஐந்து தினங்களுக்குப் பின் அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ங்தெடுக்கப்பட்டார். நான்கிங் குடியரசின் தலைநகராக ஏற்படுத்தப் பட்டது. பெகிங் நகரில் வலிமையற்று ாைங்து தேய்ந்துகொண்டிருங்த மஞ்சு ஆட்சி மரணத் தருவாயில் துடித்துக் கொண்டிருங்தது. புரட்சிக் காரர்கள் அதை விரைவில் எளிதாக முடித்து விடலாம் என்று தைரியம் கொண்டிருந்தனர். சாய்ஹங் என்ற சிற்றுாரில் பிறந்து சிலேயை உடைத்த சிறு குழந்தை, பல்லாயிரம் வருஷங்களாக முடியரசாக கடந்து வங்த சீன அரசாங்கத்தையே உடைத்துவிட்ட விஷயம், உலக சரித்திரத்தில் குறிப்பிடத் தகுந்த ஒர் உன்னத நிகழ்ச்சியாகும். குடியரசை அமைத்ததோடு புரட்சி முடிந்து விடவில்லை. தேசம் முழுதும் குடியரசின் கீழ் வங்து விடவில்லே. தனித் தனிப் படைகளே வைத்துக் கொண்டு யுத்தமே தொழிலாகவுடைய பழைய