பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லன் யாட்-லேன் 81 பிரபுக்களை இன்னும் ஒழிக்கவில்லே. கல்வியறிவற்ற பெரும்பாலான மக்களுக்குக் குடியரசின் மகத்துவத் தைத் தெரியப்படுத்த வேண்டியிருந்தது. இத்தகைய காரியங்களை யெல்லாம் வெகு விரைவாகச் செய்து முடிக்க வேண்டியிருந்தது. டாக்டர் ஸ்ன்னுடைய திட்டப்படி இக்தக் காரியங்கள் மூன்று படிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. முதல் படி, ராணுவத்தின் மூலம் வெற்றியை கிலே நாட்டுதல் ; இரண்டாம் படி, மக்களுக்கு அரசியல் கல்வி போதனே : மூன்ரும் படி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பெற்ற பிரதி நிதிகள் மூலம் ஜனங்களே அரசாங்கத்தை கடத்துதல். முதலாவதாகப் பெகிங் நகரத்து ராஜ வம்சத்தினிட மிருந்து ஆட்சி முழுதையும் கைப்பற்ற வேண்டி யிருந்தது. அந்தச் சமயம் புரட்சியை எதிர்த்து அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு யுவான் வதி-கேய் என்ற மாஜி தளகர்த்தர் நியமிக்கப் பட்டிருந்தார். ஆடிக் கொண்டிருந்த அரசாங்கத்திற்கு அவரே முதல் மந்திரியாகவும் சேனதிபதியாகவும் ஆகிவிட்டார். அவர் மகா சாமர்த்தியசாலி, தயவஞ்சகர், சுயகலம் தவிர வேறு கொள்கை தத்துவம் ஒன்று: இல்லாதவர். டாக்டர் ஸன் தம்முடைய தயாள குணத் தில்ை அந்த மூர்க்கரை நம்பி மோசம் போர்ை. அவர் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்து யுவான் எதிகேயைக் குடியரசுத் தலைவராக்க உதவி செய்வதாகக் கூறி, அந்த வஞ்சகர் மூலம் கலகம் இல்லாமலே மன்னர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்தார். யுவான், ஒரு பக்கம் மன்னரிடம் மேற கொண்டு ஆட்சி கடக்காதென்று கையை விரித்துப் பயமுறுத்தியும், மறுபக்கம் ஸ்ன்னுடைய உதவியால் குடியரசில் பதவி பெறச் சாமர்த்தியமாக முயற்சி செய்தும் வந்தார். பின்னல் அவர் மன்னர் ஆட்சியை எளிதில் ஒழித்துவிட்டு, ஸ்ன்னுடைய உதவியால் குடியரசுத் தலைமைப் பதவியைப் பெற்ருர். புரட்சி இ. 6