பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சியாங் கே-வேடிக் ஆதிக்கம் பெற்றுத் தொண்டு செய்யாத பகுதியே இல்லை. டாக்டர் ஸன் நோய்வாய்ப் பட்டதும் பெகிங் நகருக்குச் சென்று தக்க வைத்தியர்களைக் கொண்டு உடலைப் பரிசோதனை செய்து கொண்டார். அவ ருடைய ஈரல் முதலிய உறுப்புக்களில் புண் ஏற்பட்டு விட்டதால் நோய் குணமாகாது என்று வைத்தியர்கள் முடிவு கூறினர். சில வாரங்கள் வைத்திய சாலேயி லேயே தங்கியிருந்து, 1935, மார்ச்சு 12வட ஸன் பூத உடலை நீத்துப் புகழுடம்பு பெற்ருர் பிறந்தது முதலே தேசத்திற்காகச் சந்தனக் கட்டைபோல் தேய்ந்து தேய்ந்து தியாகம் செய்துவந்த அந்த உடல் அடக்கம் செய்யப்பட்ட காலத்தில் பதினெட்டு காடுகளின் பிரதிநிதிகள் விஜயம் செய்திருந்தனர். இந்தியாவி லிருந்து காங்கிரஸ் பிரதிநிதியாக பண்டித ஜவாஹர் லாலும் சென்றிருந்தார். ஸன் அடக்கம் செய்யப் பட்டிருக்கும் இடம் சீனர்களுக்கு ஒரு புண் ணிய ஸ்தலமாக இருந்து வருகிறது. ஸன் யாட்-லென் இறக்கம் தருவாயில் மரண. சாஸனம் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தார். அதுவே சீனக் குடியரசுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. சீன முழுதிலும் அது லட்சக் கணக்காக அச்சிட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு: 'நாற்பது வருவுங்களாக என் தேசமக்களின் புரட்சி இயக்கத்திற்காக நான் இடைவிடாமல் உழைத்து வந்திருக்கிறேன் . அந்த இயக்கத்தின் நோக்கம் சீன சுதந்தியத்தையும் சமத்துவத் தையும் பெறுவது. இங்த நாற்பது வருஷங் களில் பெற்றுள்ள அதுபவத்திலிருந்து, இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குப் பெரு வாரியான மக்களே எழுச்சியடையச் செய்து, உலகத்தின் மற்ற காட்டார்களில் கம்மைச்