பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சியாங்கே-ஷேக் தலைவர்களைப் பயிற்சிபெறச் செய்யவேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினர். மறுமலர்ச்சி மூலம் ஒரு புதிய சீன சமூகம் பிறக்கும் என்பது அவர் கருத்து. அவசரப் படாமல், உடனே கைமேல் பலனைக் கருதாது, வேலை செய்து வரவேண்டிய அவசியத் தையும் அவர் விளக்கினர். அழுகிக் கொண்டிருந்த சமூகம் ஆரோக்கியம் பெற்று எழுந்திருப்பதற்கு இந்த இயக்கமே சஞ்சீவி மருந்து என்று அவர் கண்டார். கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் அடிப்படையாக இருக்க வேண்டியவை விசுவாசமும் மான உணர்ச் சியுமே என்பது அவர் தீர்மானம். முதலில் நம் வீட்டை ஒழுங்குபடுத்தி அமைக்க வேண்டும், பிறகு தான் வெளியாருடைய ஆக்கிரமிப்புக்களே வெற்றிகர மாக எதிர்க்க முடியும் என்று பல வருஷங்களாகவே அவர் கூறிவந்திருக்கிருர். ஆகவே காலத்திற்கு ஏற்ற படி சீன மாறுதலடைந்து முன்னேற அவர் காட்டிய வழி மிகச் சிறந்ததாக அமைந்தது. அத்துடன் அவருடைய சீரிய ஒழுக்கமும், ஒழுக்கத்தின் அவசியத்தைப் பற்றி அவர் கொண்டுள்ள கருத்தும் புதிய இயக்கத்தின் மூலம் வெளியாயின. - இயக்கம் புதிதா யிருந்தாலும் அதன் அடிப் படைத் தத்துவங்கள் எல்லாம் பழைய அறிவாளரும் அறவோரும் அறிவுறுத்தி வந்தவைதாம். பழைய தத்துவ ஞானக் களஞ்சியத்தையும் ஒழுக்கவிதிகளையும் புதிய கலேப் பண்புக்கு அடிப்படையாக அமைத்துக் கொண்டு, மேல்காட்டு விஞ்ஞான முறைகளையும் பின் பற்றி வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இயக்கத்தின் நோக்கம். சமூகம் முன்னேறுவதற்குக் கட்டுப்பாடு, ஊக்கமாகத் தொழில் செய்தல், கலை உணர்ச்சியுடன் கெளரவமான வாழ்க்கை ஆகிய மூன்றும் அவசியம். கட்டுப் பாட்டினல் மக்கள் அனைவரும் தேசாபிமானமும் விசுவாசமும் கொண்டு, விதிகளுக்கு அடங்கி நடப்ப