பக்கம்:சீனத்தின் குரல்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
சீனத்தின் குரல்

"மக்களின் இயற்கையமைப்பு ஒன்று போலவே இருக்கிறது. ஆனால் அவர்களுடைய பழக்கங்களே அவர்களை வெகுதூரம் பிரித்து வைத்து விடுகின்றன".

"பயிற்சி இல்லாத மக்கள் கூட்டத்தை போருக்கு அழைத்துச் செல்வது அவர்களைத் தூர எறிந்துவிடுவதற்குச் சமானமே ஆகும்."

"அகங்காரம் இல்லாமல் செல்வராய் வாழ்வதைவிட முணுமுணுக்காமல் ஏழையாய் வாழ்வது கடினம்".

"நற்குணம் தனிமையில் வாழமுடியாது. அதைச் சுற்றி அன்பர்கள் தோன்றிக். கூடிவிடுவது திண்ணம்".

"ஓர் உயர்ந்த ஜனசமூகத்தை ஆளுவதில் சிறுமீனைக் சமைப்பதைப் போல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்".

"சிந்தனையில்லாக படிப்பு பயனற்றது. படிப்பிலாத சிந்தனை அபாயகரமானது" என்றான்.

அவன் காலம்

இயேசு பிறப்பதற்கு ஐந்து நாற்றாண்டுகளுக்கு முன்தோன்றிய கன்பூஷியஸ் செய்த மேற் சொன்ன சீர்திருத்தங்கள் ஓரளவுக்கு மக்கள் மக்கள் மக்களாக்க பயன்பட்டது. அவனுடைய காலம்