40
சீனத்தின் குரல்
சீனத்தின் சுடராக 1866-ம் ஆண்டு நவம்பர் திங்கள் இரண்டாம் நாள் குடுவாங் மாகாணத்தில். சாய-யங் என்ற கிராமத்தில் சன்-யாட்-சன் பிறந்தான். தாய் தந்தையர்கள் பெயர் தெரியவில்லை ஆனால் பெற்றோர்கள் கன்பூஷியஸ் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மாத்திரம் தெரிகின்றது. முதலில் ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தில் படித்து தன் அண்ணன் உதவியால் ஹவாய் (Hawai) தீவில் இருந்து கல்லூரியில் படித்தான்.
தன் பெற்றோர்கள் பின்பற்றிவந்த கன்பூஷியஸ் {மதத்தைவிட்டு, கிருஸ்து மதத்தைத் தழுவ வேண்டுமென்று நினைத்தார். கிருஸ்து மகத்தைத் தழுவியவர்களால்தான் இப்படி வீரமாக இருக்க முடியுமென்று நினைத்தாரோ என்னவோ, அந்த கிருஸ்துமத மோகம் அவரிடம் அதிகமாகக் காணப்படவே தன் அண்ணன் உடனே இந்தச் செய்தியை பெற்றோர்களுக்கு அறிவித்துவிட்டான். தந்தைக்கு கிருஸ்து மதத்தின்மேல் கோபமில்லாவிட்டால், அதைப் பின்பற்றிய ஆங்கிலேயர்கள் செய்யும். அக்ரமங்களைப் பார்த்துப் பார்த்து கிருஸ்து மதம் இதைத்தான் இவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறதோ என்று ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இப்படி ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கும் தந்தைக்கு தன் மகன் கிருஸ்தவ