உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

45


மல், தாங்களாகவே தாய் நாட்டுக்குச் சேவை செய்ய தயங்காமல் முன் வந்தார்கள். அதுவரை சீனத்துக்கு எவை எவை? தேவைப்பட்டனவோ அவ்வளவையும் இந்த நால்வர்களே தேடித் தந்தார்கள். நாற்றாண்டுக்கு ஒருவராக் பிறக்காமல், எல்லாரும் ஒரே நூற்றாண்டில். அதுவும் முற்பகுதி பிற்பகுதிகளில் ஒவ்வொருவராக பிறக்காமல் எல்லாரும் சம காலத் தலைவராகப் பிறந்தார்கள். கட்டடத்தை எழுப்பும் தொழிலாளிகள் அனைவருமே ஒன்று சேருவதைப்போல், இசையரங்கில் பல்வேறு வாத்திய விற்பன்னர்கள் ஒன்றாய்ச் சேருவதைப் போல், புரட்சி செய்யப் புறப்படும் மக்கள் கை கோர்த்து ஒன்றாய்க் கிளம்புவதைப்போல், புதிய சீனத்தைக் காண்பதற்காக நால்வரும் ஒன்றாய்த் தோன்றினார்கள். சீன நாடு பல நாட்களாகப்பட்ட கஷ்டத்தின் பலனாக இந்த நால்வர் கிடைத்தனர். நால்வரையும் ஒன்றாக சேர்த்துப் பார்த்தால் நான்கு பக்கங்களிலும் பட்டைத் தீட்டப்பட்ட ஒரே வைரக் கல்லைப்போல ஜொலித்தார்கள்.

1. அவர்களில் என் பூ, Yen-Fu, என்பவர் ஆதம் ஸ்மித், ஜோன்ஸ் ஸ்டுவார்ட் மில், என்ற நிபுணர்கள் எழுதிய பொருளாதார தத்துவங்களை. சீன மொழியில் மொழி பெயர்த்தார்.

2. லின்-ஷூ Lin-Shu என்பவர், சேர்லெஸ் டிக்கன்ஸ், சர்வால்டர்ஸ்கார்ட் என்பவர்கள் எழுதிய சமுதாய நூல்களை மொழி பெயர்த்து தந்தார்.