உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

சீனத்தின் குரல்


யால் வந்த தாழ்வு, அச்சத்தால் வந்தபயம் ஆகிய அவ்வளவையும் விட்டு இனி ஆயுதமெடுத்தாலன்றி வாழமுடியாதென்ற விதியை நிர்ணயித்த சீனத்தின் இன்றைய தலைவன் மா -சே. அந்த மாவீரன் தான் நீண்ட உறக்கத்திலிருந்த' சீனத்தை காலைக்கதிரவன் வராமுன் எழுப்பிய செஞ்சேவல்.

பள்ளத்தாக்குகளில் விழுந்து பராமரிப்பற்று பல ஆற்றோடு ஓடி கடலில் கலந்த நீர் இன்று அணைகள் முன்நின்று ஆலோலம் பாடுகிறது. ஒளி தரும் மின்சாரமாக விசைதரும் இயந்திர இயக்கத்தின் சக்தியாக விளங்குகிறது.

காடுகளென ஒதுக்கப்பட்டவைகள். கறம்பு நிலங்களென கைவிடப்பட்ட இடங்கள் எல்லாம் இன்று கதிர்குலுங்கும் நஞ்சைகளாக்கப்பட்டிருக்கின்றன. நீர்வளத்தையும் நிலவளத்தையும் மக்கள் வளத்துக்கும் ஈடாக்கி மக்களை மக்களாகவே வாழ வைத்த மாபெரும் சாதனையை மூன்று ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது சீனம்.

இன்பக் குரல் தவிர வேறு எந்தக் குரலும் கேட்க முடியாத அளவுக்கு வேர்த்து சலித்து விழாத, உழைப்பால், உறக்கமற்ற விழிப்புணர்ச்சியால், இரத்தம் சிந்த அஞ்சாமையால், ஈடிணையற்ற படையெடுப்பால், இறுதிவரை போராடி நெடுங்காலமாக இடிந்திருந்த செல்வாக்கை மீண்டும் அகில உலக கெளரவ சிங்காதனத்திலேற்றிய சீனம் நல்லதோர்