பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


என்பது ராணியார் முடிவு. அதனையொட்டி காளையார் கோவிலில் படைமாத்தார் கெளரிவல்லப ஒய்யாத் தேவருக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது. அனேகமாக நாட்டுத் தலைவர்கள் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். சிறப்பான வழிபாடுகள் முடிந்தவுடன் கோயில் மண்டபத்தில் இடப்பட்டிருந்த இருக்கையில் இளவரசர் கெளரி வல்லபரை இருக்கச் செய்து பிரதானிகளும் நாட்டுத் தலைவர்களும் மரியாதை செலுத்தி இளவரசரை வணங்கினர்.[1]

சில மாதங்கள் சென்றன. சிவகங்கைப் பிரதானிகளுக்கு இளவரசர் கெளரி வல்லபரை பிடிக்கவில்லை. இதற்கான காரணங்களைத் தெரிவிக்கும் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. கள ஆய்வின்பொழுது கிடைத்த ஒரே செய்தி, பிரதானி மருது சேர்வைக்காரர்களது மக்கள் படைமாத்துார் கெளரி வல்லபத் தேவரது அனுமதி இல்லாமலும், அவரை அழைத்துச் செல்லாமலும் படைமாத்துர் காட்டில் அவர்கள் வேட்டையாடியதையொட்டி எழுந்த விரோத மனப்பான்மையே அவர்களது விரோதப் போக்கிற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது. பிந்தைய நிகழ்வுகளுக்கு இதுவே சரியான காரணமாக அமைதல் வேண்டும்.

ஆனால், செல்வ ரகுநாதன் கோட்டை ஆவணங்கள் வேறு விதமான செய்திகளைச் சொல்லுகின்றன.[2] நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது மூன்றாவது மனைவி கோவானுர் நாச்சியார் மூலம் பிறந்த பூவுலகுத் தேவர் அரண்மனை யானை ஒன்றின் மீது அமர்ந்து சிவகங்கையில் இருந்து நாலு கோட்டைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார். ஏற்கனவே பூவுலகுத் தேவர் மீது பொறாமையும் குரோதமும் கொண்டிருந்த சிவகங்கை அரண்மனைப் பணியாளர் அடைப்பம் வெள்ளைக்காலுடையார், இந்தக் காட்சியைக் காணச் சகிக்காதவராக ஆத்திரமடைந்து, நாட்டுத் துப்பாக்கியால் குறிபார்த்து பூவுலகுத் தேவரைச்சுட்டுக் கொன்று விட்டார். அப்பொழுது சிவகங்கை மன்னரும் பூவுலகுத் தேவரது ஒன்றுவிட்ட தமையனாருமான சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர், உடல் நலிவுற்று இருந்தார். தம்பி பூவுலகுத் தேவரின் படுகொலை பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதில் தாமதமாகி விட்டது.

நாலுகோட்டைப் பாளையக்காரரது பங்காளியும், படைமாத்துர் பாளையக்காரருமான ஒய்யத் தேவர், நாலுகோட்டைப் பாளையத்தின் முதல் பாளையக்காரர் பெரிய உடையாத்தேவரது சகோதரர் மதியார் அழகத் தேவர். படை மாத்தூர் பாளையத்தின் தலைவர். இவரது மகன் ஒய்யாத் தேவர் பூவுலகுத் தேவரது படுகொலையைச் சகித்துக் கொள்ள


  1. Military Consultations - Vol. 285/28.6.1801, P: 38-39
  2. செல்வரகுநாதன் கோட்டை ஆவணங்கள், சென்னை.