பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தறிக்கடமையும் வசூலிக்கப் பெற்றன.[1]

இத்தகைய நிலையில் ஆற்காட்டு நவாப்பிற்கு ஆண்டு காணிக்கையாக (பேஷ்குஷ்) ரூபாய் மூன்று லட்சம் செலுத்த வேண்டியதாக இருந்தது.[2] நவாப்பின் மேலாண்மையை மதித்து நேசக் கரம் நீட்டியதற்கு வழங்கப்பட்ட கொடுமையான தண்டனை இது என்பதை மன்னர் உணர்ந்தார். அன்று தென்னகத்தில் நிலைத்து இருந்த பாரம்பரிய அரசுகளான திருவாங்கூர், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய அரசுகள் அனைத்தும் இந்திய அளவில்உள்ள முகலாயப் பேரரசரின் மேலாண்மையை ஏற்று அவரது தென்னாட்டுப் பிரதிநிதி என்ற முறையில், ஆற்காட்டு நவாப்பை மதித்து, இந்த அரசுகள் வழங்கும் கண்ணியமான அன்பளிப்புத் தொகையே, ஆண்டு பேஷ்குஷ் தொகை என்பதாகும். அந்தந்த அரசுகளின் வருவாய்களின் பேரில் செலுத்தப்படும் கட்டாயத் தீர்வை அல்ல.அது. ஆதலால் ஆண்டுகாணிக்கை தொகை பற்றி மன்னர் வேங்கண் பெரிய உடையாத் தேவர் கும்பெனித் தலைமையுடன் தொடர்பு கொண்டார். அந்த தொகையினைச் செலுத்துவதில் உள்ள சிரமத்தை தெரிவித்தார். தொகையின் அளவை குறைத்து நிர்ணயம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.[3]

கி.பி.1785-லும், 1787-லும் நவாப்பும் கும்பெனியாரும் செய்து கொண்ட உடன்பாடுகளின்படி நவாப்பிற்கு சேரவேண்டிய குறுநில மன்னர்களது இந்தக் காணிக்கையை வசூலிக்கும் உரிமையையும் அதனை வசூல் செய்வதற்கு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கும்பெனியார் நவாப்பிடமிருந்து உரிமை பெற்று இருந்தனர்.[4] அதற்காகவே கும்பெனியார் கலெக்டர்களையும் வசூல்தார்களையும் நியமித்து இருந்தனர், கும்பெனித் தலைமை சிவகங்கை மன்னரது கோரிக்கையை அனுதாபத்துடன் பரிசீலித்தனர். இதற்கு மிக முக்கியமான இன்னொரு காரணமும் இருந்தது. அன்றைய அரசியல் சூழ்நிலையில் கும்பெனித் தலைமை பாளையக்காரர்களை அடக்கி உதவுவதற்காக படையணிகளை ஈடுபடுத்திய செலவு என்ற இனத்தில் பெருந்தொகையைக் கோரி ஆற்காட்டு நவாப்பை மிகப் பெரிய கடனாளியாக மாற்றியிருந்தனர். கோட்டைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, அமைதி காத்தல் என்ற வகையிலும் செலுத்த வேண்டிய பணம் என நவாப்பின் முதுகெலும்பை ஒடித்து ஆண்டுதோறும் பழைய பாக்கிகளுக்கான ரூபாய் பன்னிரண்டு லட்சம் பகோடா பணம் (சுமார் நாற்பத்து ஏழு லட்சம் ரூபாய்) நடப்பு கணக்கிற்காக ஒன்பது லட்சம் பகோடா பணம் (சுமார் முப்பது லட்சம்


  1. Pulick Consultations, Vol. 182 (A) 1793
  2. Rajayyan. Dr. K.-History of Madura (1974) P: 308
  3. Rajayyan. Dr. K. – History of Madura (1974) P: 308
  4. Carnatic Treaty 1787 AD