பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 113
 

தருவதாக இருந்தன. ராணி வேலு நாச்சியாரது ஆட்சியின் பொழுது எழுந்த அதே குழப்பமான சூழ்நிலை இறுக்கமான உறவு.அரசியலுக்குப் புதியவரான மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவரால் அவரைச் சமாளிப்பது என்பது இலகுவான செயல் அல்லவே!

பக்கத்து நாடுகளான பெரிய மறவர் சீமை, தொண்டமான் சீமை சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் பிரதானி சின்னமருது சேர்வைக்காரரது செயல்பாடுகளில் நளினமும், மென்மையும் காணப்படவில்லை. மாறாக, உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, உண்மைகளை மறந்த நிலையில், சிறிய பிரச்சனைகளைக்கூட பெரு ம் பிரச்சனைகளாகக் கருதி முடிவு செய்யப்பட்டன. மேலும், சிவகங்கைச் சீமை, இராமநாதபுரம் சீமையில் இருந்து உருவானது என்பதும் அந்தச் சீமையின் மன்னர், சிவகங்கை மன்னரது இரத்த பந்தத்தில் இணைந்த உறவினர் என்பதும் நினைவில் கொள்ளப்படவில்லை. கடந்த நாற்பது ஆண்டு கால அரசியலில், தாம் பிரதானியாக இருந்த வரை, சிவகங்கைப் பிரதானி தாண்டவராயபிள்ளை முக்கியமான அனைத்து பிரச்சனைகளிலும், இராமநாதபுரம் பிரதானிகளான வெள்ளையன் சேர்வை, தாமோதரம்பிள்ளை, பிச்சை பிள்ளை ஆகியோர்களுடன் கலந்து யோசிக்காமல் முடிவு செய்தது இல்லை. இத்தகைய முந்தைய கால கட்ட முறைகள் புறக்கணிக்கப்பட்டதால் இந்த இருநாடுகளது அரசியலில் உருவான சூடும், வெறுப்பும் தணியவில்லை. குறிப்பாக,

(1) சிவகங்கைச் சீமைத் துறைமுகமான தொண்டிச் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் சேதுபதி மன்னரது சீமையைச் சேர்ந்த திருவாடனையில் உள்ள சுங்கச் சாவடியினைக் கடந்தே செல்ல வேண்டும். அவர்கள் விதிக்கும் சுங்கத் தீர்வையைச் செலுத்த வேண்டும். ஆனால் சிவகங்கை பிரதானிகள் அந்த தீர்வையைச் செலுத்த மறுத்தனர்.[1]

2. இதனால் சினமடைந்த சேதுபதி மன்னர், சிவகங்கைச் சீமையில் பட்ட நல்லூர்பேட்டை வழியாகச் செல்லும் திருநெல்வேலி - சோழ சீமை வணிகர் பெருவழியை முடக்கி, வணிகர்கள் சேதுபதி சீமை மூலமாக சோழ சீமைக்கு செல்லுமாறு செய்து சிவகங்கை அரசுக்கு வருமான இழப்புகளை ஏற்படச் செய்தார்.[2]

3. இதற்கு பதிலடியாக சிவகங்கை பிரதானிகள் சேதுபதி சீமைக்குள் சிவகங்கைச் சீமையை கடந்து செல்லும் ஆற்றுக் கால்களை அடைத்து சேதுபதி சீமைக்கு நீர் வரத்து பெறமுடியாமல் செய்தனர்.[3]


  1. Military Country Correspondence - Vol.45 (1794) P: 101-104
  2. கமால் Dr. S.M. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) பக்:
  3. Political Despatches of England Vol. III (1794) P. 316 18