பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 119

பிரச்னைகளைப் பற்றி கலந்து பேசுவதற்காக கலெக்டர் பவுனி விடுத்த சம்மனை ஏற்று மதித்து சிவகங்கைப் பிரதானி சேதுநாட்டு முத்துராமலிங்க பட்டின சத்திரம் சென்று கும்பெனிக் கலெக்டர் பவுனியை சந்தித்தார்.[1] மறவர் சீமை முழுவதும் கி.பி.1794-ல் வறட்சி மிகுந்த பொழுது, வணிகர்களான பரங்கியர் தங்களது தானியங்களை சிவகங்கைச் சீமையில் விற்பனை செய்து இலாபம் ஈட்டுவதற்கு சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளித்து உதவினர்.[2]

மேலும், பரங்கியரின் சிறைக்காவலில் உள்ள சேதுபதி மன்னரை விடுதலை செய்யும் இலக்காக சேதுநாட்டின் தென்பகுதியில் கி.பி.1799 - ஏப்ரல் - மே திங்களில் வெடித்த மக்களின் ஆயுதப் புரட்சியை அடக்க முடியாமல் தவித்த கும்பெனியாரது உதவிக் கோரிக்கைக்கு இணங்கி, சிவகங்கை மறவர்களை கமுதிக்கு அனுப்பி வைத்தனர். இவ்விதம் அகத்தில் கொந்தளித்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு ஆங்கிலேயருக்கு உதவி செய்தும் என்ன பயன்? தன்னலம் ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டு தழைத்து ஏகாதிபத்திய விசுவரூபம் எடுத்து இருந்த கும்பெனியார், சின்ன மருது சேர்வைக்காரரது நடவடிக்கைகளையே சந்தேகப்படத் தொடங்கினர். அதில் முதலாவது துபாஷ் ரங்கப் பிள்ளை விவகாரம்.

இராமநாதபுரம் சீமை பேஷ்குஷ் கலெக்டராகப் பணியேற்ற காலின்ஸ் ஜாக்ஸன், சென்னைக் கோட்டையில் இருந்து இராமநாதபுரம் வரும்பொழுதே, துபாஷ் ரங்கப் பிள்ளை என்பவரைக் கையோடு அழைத்து வந்தார். கலெக்டரது அலுவலகப் பணியில் மட்டுமல்லாமல், தனிப்பட்டமுறையில் கலெக்டரது 'வசதிகளை' நிறைவு செய்வதற்காக. எங்கு பார்த்தாலும் கையூட்டு, இருவருக்கும் பை நிறைந்தது. வடக்கே கும்பெனியாரது கவர்னர் ஜெனரல் ஆன வாரன்ஹேஸ்டிங்க்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மக்களை எவ்விதம் சுரண்டுவது என்ற ஊழல் உத்தியை உலகறியச் சொல்லிக் கொடுத்து இருந்தார் அல்லவா? அரசுத் தீர்வையாக வசூலிக்கப்பட்ட நெல்லின் மதிப்பை குறைவாக மதிப்பீடு செய்து அதனை வாங்கிக் கொண்ட வியாபாரிகளிடமிருந்து கமிஷன் பெற்றார்.

இத்தகைய ஊழல்கள் பெருமளவில் நடந்து இருப்பதை, டச்சு வியாபாரி மெய்ஜி என்பவர் கும்பெனித் தலைமைக்குப் புகார் செய்த பின்னரே சென்னைக்கு தெரிய வந்தது. கீழக்கரை பெரும் வணிகர் அப்துல்காதர் மரைக்காயர், சென்னை வணிகர் ஷமால்ஜி, எட்டையாபுரம் பாளையக்காரர், சிவகங்கைப் பிரதானி ஆகியோர்களும் துபாஷ் ரங்க


  1. Military Consultations Vol. 189(A)/26.9.1794. P.3910
  2. Military Consultations Vol. 183, P.96-1004.