பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


திருபுவனம், திருப்புத்தூர், மானாமதுரை, பார்த்திபனூர், பிரான்மலை, அனுமந்தக்குடி, சூரக்குடி, காளையார்கோவில் ஆகிய ஊர்களில் அமைந்து இருந்த கோட்டைகள் இடித்து அழிக்கப்பட்டன.[1]

ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஜமீன்தார்கள் ஆட்சியில் தர்ம காரியங்களுக்கு முழுமையான கிராமங்களை வழங்குவதில் பல சிக்கல்கள் இருந்தன. சில சிறப்பான செயல்களுக்காக ஜமீன்தாரியில் அடங்கியுள்ள சில ஊர்களை திருக்கோயில், தனியார் ஆகியவர்களுக்கு இனாமாக வழங்குவதற்கு ஜமீன்தார் விரும்பினாலுங்கூட, அந்த ஊர்களுக்கு நிகுதி செய்யப்பட்ட தொகையை பொறுப்புத்தொகை (குயிட் ரெண்ட்)யாக கும்பெனியாருக்குச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், கெளரி வல்லபரிடத்தில் மேலோங்கி நின்ற ஆன்மிகப் பிடிப்பு காரணமாக சில கிராமங்களை சர்வ மான்யமாக வழங்கி உதவியுள்ளார். அவைகளுக்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள சில குறிப்புகளில் இருந்து கீழ்க்கண்ட திருக்கோயில்கள், திருமடங்கள், தனியார்கள் ஆகியோர் அவரது அறக்கொடைகளைப் பெற்று இருந்ததை அறிய முடிகிறது.[2]

1. திருக்கோயில்கள்
கி.பி அன்னவாசல் இராமநாதசாமி ஆலயம்,
1829 இராமேஸ்வரம்
1802 மாறனி சர்வேஸ்வரர் ஆலயம், சருகணி
(தேவாலயம்)
1816 நசர்புளியன்குடி முகம்முது நபி மௌறவீது
விழாவிற்கு
1816 கமுதக்குடி மீனாட்சி சுந்ததரர் ஆலயம், மதுரை
1828 கீழ்சேத்தூர் சந்திரசேகர சுவாமி கோயில்.
2. திருமடங்கள்
கி.பி வாவியேந்தல் இராமசாமி பரதேசி - போதகுரு
சாமிமடம்


3. தனியார்கள்
கி.பி மணக்குடி சிவராவ் தர்மசாசனம்,
1801 புன்னன்குடி
மணிமுடி ஏந்தல்
கருத்தன் ஏந்தல்
பொட்டல் வயல்
ஊழியமானியம்
ஜீவித இனாம்
திருப்பதி ஐயன், தர்மாசனம்

ஜீவித இனாம்

  1. Madura Dist, Records Vol. 1178 (A) 17.5.1802, P: 354
  2. சிவகங்கை தேவஸ்தான பதிவேடுகள்