பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 171


1. வெள்ளை நாச்சியார்
2. ராக்கு நாச்சியார்
3. வேலு நாச்சியார்
4. முழுதார் நாச்சியார்
5. அங்கமுத்து நாச்சியார்
6. பர்வதம் நாச்சியார்
7. முத்து வீராயி நாச்சியார்
8. கருப்பாயி ஆத்தாள் நாச்சியார் (இசை வேளாளர்)
9. மாணிக்கம் நாச்சியார் (கள்ளர்)
10. குருவாடிப்பட்டி கருப்பாயி நாச்சியார் (அகம்படியர்)


இவர்களில் முழுதார் நாச்சியார் (தொ வரிசை எண்.4), அங்கமுத்து நாச்சியார் (தொ.வ.எண்.5) முத்து வீராயி நாச்சியார் (தொ.வ.எ.10) ஆகிய மூன்று பேர்களுக்கும் குழந்தை பேறு கிட்டவில்லை. எஞ்சியுள்ள நான்கு (தொ.வ.எண். 1, 2, 3, 6) மனைவிகளில் (தொடர் வரிசை எண் 8, 9, 10)ல் கண்ட வைப்புகள் நீங்கலாக) முதலாமவருக்கு ஒரு பெண்ணும், இரண்டாமவருக்கு ஒரு பெண்ணும், மூன்றாமவருக்கு ஒரு ஆணும், மூன்று பெண்களும் இருந்தனர். ஜமீன்தார் இறக்கும்பொழுது உயிருடன் இருந்தவர்கள் அங்கமுத்து நாச்சியார் (5), பர்வத வர்த்தினி (6), முத்து விராயி (7), இந்த மூன்று பெண்களில் வயதில் முதியவரான கைம்பெண்ணுக்கு ஜமீன்தாரது வாரீசாக சிவகங்கையின் அடுத்த ஜமீன்தார் ஆவதற்கு உரிமை இருந்தது. ஆனால், படை மாத்துர் ஒய்யாத் தேவரது மகன் முத்துவடுகநாததேவர் தம்மிடத்தில் சிவகங்கை ஜமீனுக்கான உரிமை ஆவணம் இருப்பதாக கும்பெனியாரை ஏமாற்றியதால் அவர் கி.பி.1730-ல் சிவகங்கையின் இரண்டாவது ஜமீன்தாராக்கப்பட்டார்.


கி.பி.1731-ல் இவர் மரணம் முற்றதும், அவரது மகன் போதகுருசாமித் தேவர் மூன்றாவது ஜமீன்தார் ஆனார்.


அவ்வளவுதான். ஓராண்டிற்கு மேலாக உருவாகி வந்த ஜமீன் உரிமை பற்றிய குழப்பங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றன. ராணி ராக்குநாச்சியாரது பேரன் முத்து வடுக நாதத் தேவர் (1), ராணி அங்க முத்து நாச்சியார் (2), ராணி வேலு நாச்சியாரது மகள் கோட்டை நாச்சியாரது சுவீகார புத்திரன், (3), என்ற மூவரும் தங்களது உரிமை மனுக்களை கி.பி.1732-ல் தென் பிராந்திய மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த உரிமை வழக்குகளின் முடிவில் கி.பி.1735-ல் ராணி அங்க முத்து நாச்சியாரது உரிமையை அங்கீகரித்தது. இத்தீர்ப்பு வெளியிட்ட பொழுதிலும், அவைகளின் மேல் முறையீடு. ஏனைய வாரிசுதார்களது உரிமை என்பன போன்று அடுத்தடுத்து பல வழக்குகள் தொடர்ந்தன. மதுரை, சென்னை வழக்கு மன்றங்களின் தீர்ப்புரைகளுடன் அமையாமல், அவை அப்பொழுதும் லண்டனில் அமைந்து இருந்த பிரிவு கவுன்சில் என்ற உச்சநீதிமன்ற முடிவுகளுக்கும் பலமுறை சென்று வந்தன. அந்த