பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 183


இத்தகைய ஜமீன்தாரி முறை மக்கள் வாழ்வில் பல அவல நிலைகளை ஏற்படுத்தினாலும் சிவகங்கையை ஆண்ட ஜமீன்தார் உடையண ராஜா தனது ஜமீனை குத்தகைக்கு விட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்ட பொழுதிலும் அவருடைய கொடை உள்ளத்துக்கு எடுத்துக்காட்டாக இன்றும் சிவகங்கை நகரில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மன்னர் மேல் நிலைப்பள்ளி, அலீஸ் மில்லர் மகளிர் பள்ளி, மன்னர் நடுநிலைப்பள்ளி ஆகியவை அவருடைய கல்வித் தொண்டினை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

அவருக்கு அடுத்து வந்த துரைச்சிங்க ராஜா திருப்பத்தூரில் ஸ்விடிஸ் மருத்துவமனை அமைவதற்கு உரிய நிலமும், நிதியமும் வழங்கினார். கால்நடை பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கருதி சிவகங்கை நகரில் கால்நடை மருத்துவமனையை தமது சொந்தப் பொறுப்பில் நிறுவிநடத்தி வந்தார். ஏழை மாணவர்சாதிமத பேதமற்று கல்வி பயில இலவசமானவ விடுதி ஒன்றினை தோற்றுவித்தார். அவருக்குப் பின் வந்த சண்முகராஜா இதனைப் போன்று கிறித்துவ

என்பவருக்கு நிலம் கொடுத்தார். இன்றும் அந்தப் பள்ளி ராஜகுமாரி ராஜேஸ்வரி கலா சாலை என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வள்ளல் அழகப்ப செட்டியார் தனது கல்வி பணியைத் தொடங்க முற்பட்டபோது சண்முகராஜா அவர்கள் தனக்குச் சொந்தமான செக்காலைக் கோட்டையில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை கொடுத்து உதவினார். சிவகங்கையில் தனது தந்தையாரின் பெயரில் கல்லூரி நிறுவினர். அதற்கு தனது சொந்த நிலத்தையும் நிதியையும் கொடுத்தார்.

அவருடைய மைந்தர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ராஜா சிங்கம்புணரியில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்குவதற்கு 1 லட்சம் ரூ நிதியும் நிலமும் கொடுத்து பெண்கள் பள்ளி தொடங்கி இன்றும் ராணி மதுராம்பாள் நாச்சியார் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக நடைபெற்று வருகிறது.

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் மதுரை நாயக்கப் பேரரசு அதிசயிக்கும் வண்ணம் பேராண்மை படைத்து விளங்கிய மறவர் சீமையின் வடபகுதி நாளடைவில் தொண்டமான் சீமை ஆயிற்று. பாம்பாற்றுக்கு வடக்கே உள்ள சோழநாட்டுப் பகுதி தஞ்சை மன்னருக்கு தானம் வழங்கப்பட்டது. பின்னர், எஞ்சியுள்ள பகுதியிலிருந்து சிவகங்கைச் சீமை பிரிந்தது. வரலாற்று நிகழ்வுகளினால் வடிவும் வலிமையும் குன்றியது. பழம் பெருமையை மட்டும் பேணிக்காத்து வந்த இந்த மறவர் சீமை அரசுகளை, வெடிமருந்து பலத்தில் விஞ்சி நின்ற ஆங்கில ஏகாதிபத்தியம், எளிதாக வீழ்த்தி, அவர்களுக்கு கட்டுப்பட்ட