பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

ஆனால் இந்தப் புலவர் பெருமக்கள், இந்த மன்னர் மீது பாடிய தனிப்பாடல்களும், இலக்கியங்களும் இன்று நமக்கு கிடைக்கவில்லை, என்பதுதான் மிகவும் வருத்தப்பட வேண்டியதொன்று. இதற்காக யாரை நொந்து கொள்வது. இந்தப் புலவர் பெருமக்களுக்கு முன்னரும் பொன்னங்கால் அமுத கவிராயர் அழகிய சிற்றம்பலக் கவிராயர், ஆகியோர் திருமலை ரகுநாத சேதுபதி, ரகுநாத கிழவன் சேதுபதி, ஆகிய பெரு மன்னர்களின் அவைக் களத்தை அலங்கரித்து வந்தனர். அன்பளிப்பாக சர்வமான்ய ஊர்களையும் பெற்றனர்.[1]

பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் தமிழின் நிலை தமிழ்நாடு முழுவதும் தளர்வடைந்தது. தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்த நாயக்க மன்னர்கள் (செஞ்சியிலும், தஞ்சையிலும், மதுரையிலும்) அவர்களது தாய் மொழியான தெலுங்கிற்கும், அதன் சார்பு மொழியான சமஸ்கிருதத்திற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் போற்றினர். அரசு நிலையில் மட்டுமல்லாமல், ஆலயங்களிலும் தெலுங்கு இசையும், கூத்தும் இடம் பெற்றன. தமிழ்ப்புலவர்களும் சான்றோர்களும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு நலிந்து வாழ்ந்தனர். 'சனியான தமிழை விட்டுச் சதிராடக் கற்றோமில்லை' எனச் சலித்தனர். 'கல்லைத் தான் மண்ணைத்தான் காய்ச்சித் தான் குடிக்கத்தான், இல்லைத்தான் பசியாமல் இருக்கத்தான் பதுமத்தான் எழுதினார்” என்று பிறவியளித்த பிரம்மனையே வசையாகப் பேசும் நிலையெழுந்தது. செஞ்சி, தஞ்சை, மதுரை, மைசூர் மாறு பாஷை செந்தமிழின் சுவையறிந்து செய்ய மாட்டார் என்று முடிவு செய்த முத்தமிழ்ப் புலவர்கள் மனமொடிந்து வாழ்ந்தனர்.

இவர்களது வாட்டம் தீர்க்கும் நிலையில் ஆங்காங்கு சில வள்ளல்கள் மட்டும் உதவினர். குமரேந்திர காங்கேயன், ஆனூர் சர்க்கரை, மாவைக் கறுப்பன், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை, இரசை மலையப்பிள்ளை, சேத்துர் தலைவர், சீதக்காதி மரைக்காயர் போர் அவர்களில் சிறப்பானவர்கள். ஆனால் இவர்களையெல்லாம் விட தங்களது வரையாத வள்ளற்தன்மையால் தமிழ்ப்புலவர்களை ஈர்த்துக் காத்த தமிழ் வள்ளல்கள் சேதுபதி மன்னர்கள்

"மூவேந்தருமற்று சங்கமும் போய், பதின்மூன்றோடு எட்டுக்,
கோவேந்தருமற்று, மற்றுமொரு கொடையு மற்று
பாவேந்தர் காற்றில் இலவம் பஞ்சாய் பறக்கையிலே
தேவேந்திர தாருவொத்தாய் ரகுநாத செயதுங்கனே"

- என்று பாவேந்தர்கள் அந்த பூவேந்தர்களைப் போற்றத் தொடங்கினர். அந்த மன்னர்கள் மீது இயற்றிய ஒருதுறைக் கோவையும் தளசிங்க


  1. Inam Fair Registers in the Sivangangai Collector's Office