பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

எளிதாக இழிவுப்படுத்தும் ஆண் ஆதிக்க உணர்வு விஞ்சி இருப்பதையே இவை சுட்டினாலும், அது வரலாற்றிற்கு மிகப்பெரிய தீங்கினை விளைவித்துள்ளது.

2.6.1772-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்த நவாப் கும்பெனிப் படைகள் சிவகங்கை சீமையில் காளையார் கோவில் கோட்டையைப் பிடிக்க 25.6.1772-ல் போர் நடத்தினர் என்பதுதான் வரலாறு. ஆனால் இந்தப் போருக்கு முன்னதாக மறவ மங்கலத்தில் மருதிருவர் நவாப் படைகளுடன் வீரப்போர்புரிந்ததாக (பக்கங்கள்123-127) புகழ்ந்து பாடல் பாடப்பட்டுள்ளது. இடைச் செருகல் இலக்கியங்களில்தான் உண்டு. வரலாற்றிலும் 'இடைச்செருகல்" உண்டு என்பதற்கு சிவகங்கை அம்மானை ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது. இது ஒன்று மட்டும் அல்ல. சிவகங்கையை விட்டு விருபாட்சியில் தங்குவதற்கு முன்னர் ராணி வேலு நாச்சியாரும் மருதிருவரும் ஓராண்டு திண்டுக்கல் கோட்டையில் தங்கியது, திப்பு சுல்தானைச் சந்தித்தது. (அப்பொழுது மைசூர் சுல்தானாக இருந்தவர் ஹைதர்அலி). வத்தலக்குண்டில் யானை வேட்டை, மேலுர் வழி திண்டுக்கல் சென்றவர்கள், சோழவந்தான், மதுரை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில் வழியில் திரும்பியது என்பன போன்ற பல நிகழ்ச்சிகள் இடைச்செருகள் ஆகும்.

மறைக்கப்பட்ட நிகழ்ச்சிகள்

1. மருது சகோதரரர்கள் சிவகங்கை மன்னரிடம் அடப்பப் பணியில் இருந்தனர் என்பதை 'அடப்ப வெள்ளைக்காலுடையாரீன்ற மருது இருவர்" (பக்கம்....) எந்தப் பணியில் இருந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

2. கிழக்கே இருந்து கும்பெனி படைகளும் மேற்கே இருந்து திருப்புவனம் கோட்டையைப் பிடித்து தளபதி பெளஷேர் சிவகங்கை வருவதையும் நன்கு அறிந்த மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் கோட்டையில் அவர்களைச் சந்தித்துப்போர் செய்ய ஆயத்தம் செய்தார் என்பதும், முன்னே வந்து விட்ட தளபதி, ஜோஸப் சுமித்துடன் பிரதானி தாண்டவராய பிள்ளை 21.6.1772-ல் சமரசப் பேச்சு பேசினார் என்பது வரலாறு. (பார்க்க பேராசிரியர் ராஜையனது History of Madura (1974) Ltdisub 261)

3. 25.6.1772-ல் நடைபெற்ற போரில் மன்னர் முத்து வடுகநாதர் பிரதானி தாண்டவராய பிள்ளை ராணியையும் அவரது பெண் குழந்தையையும் பத்திரமாக காப்பாற்றுவதற்கு விருப்பாட்சிக்கு அழைத்துச் சென்றார். பிறகுதான் மருதிருவர் விருபாட்சி போய்ச் சேர்ந்தார்கள். (பார்க்க பேராசிரியது அதே நூலின் அதே பக்கம்)