பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 205


3. சிவகங்கைச் சீமை (1976)

ஆசிரியர்: துர்க்காதாஸ் சாமி

பதிப்பு : அருணாபதிப்பகம், சென்னை-17.

இது ஒரு சிறிய கையடக்கப் புத்தகம். சிவகங்கைச் சரித்திரக் கும்மி, அம்மானை நூலினைப் பெரும்பாலும் தழுவியும் வேறு சில ஆவணங்களின் அடிப்படையில் வரையப்பட்ட நூல். அதனால் உண்மையான வரலாற்றிற்கு முரணான பல செய்திகள் இந்த நூலிலும் காணப்படுகின்றன. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

(அ) பக்கம்: 23

'சந்தா சாகிபுவின் சொந்தக்காரரான ஆலம்கான் என்பவன், இராமநாதபுரம் சிவகங்கை ஆகிய பகுதிகளில் கிடைத்த கப்பத்தொகையை ஆற்காட்டு நவாப்பிற்கு சேராத வண்ணம் ஏப்பம் விட்டுக் கொண்டு இருந்தான்."

மறவர் சீமையின் மன்னர் என்ற முறையில் சேதுபதி மன்னரோ அல்லது சிவகங்கைச் சீமை பிரிந்த பிறகு சிவகங்கைச் சீமை, இராமநாதபுரம் சீமை ஆகிய இரு தன்னரசு மன்னர்களும் யாருக்கும் எப்பொழுதும் கப்பம் செலுத்தியது இல்லை என்பதுதான் வரலாறு.

(ஆ) பக்கம்:50

'முத்து வடுகநாதருக்கு அமைச்சர்களாக தாண்டவராயபிள்ளை, தாமோதரம் பிள்ளை என்ற இரு அமைச்சர்கள் இருந்தனர். சகோதரர்களான அவர்கள் மறவர் நாட்டின் ஒற்றுமைக்குப் பாடுபட்டனர்.'

சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவர்காலம் முதல் சிவகங்கைச்சீமைக்கு ஒரே ஒரு அமைச்சர் தான் இருந்து வந்தார். இரு அமைச்சர்கள் இருந்தது இல்லை. மேலும் தாண்டவராய பிள்ளையும் தாமோதரம் பிள்ளையும் சகோதரர்கள் அல்லர். தாண்டவராய பிள்ளை அரளிக் கோட்டையை அடுத்த முல்லையூர்க்காரர். தாமோதரம் பிள்ளை இராமநாதபுரத்தை அடுத்த தீயனுார்க்காரர் என்பன உண்மை வரலாறு.

(இ) பக்கம் 97

'சிவகங்கைச் சீமையைக் கைவசப்படுத்திக் கொண்ட நவாப் கி.பி.1773-ல் அதை ஜப்தி செய்து ஏலத்துக்கு விட்டார். அதை மாத்துார் நவாப் எடுத்துக் கொண்டார்.'

தமிழ் நாட்டில் நவாப் பட்டத்துடன் அப்பொழுது இருந்த ஒரே நபர்,கர்நாடக நவாப் வாலாஜா முகம்மது அலி ஒருவர்தான். மாத்துார்